தமிழ் அமிழ்தம் - இலக்கியங்களின் இணையத் தொகுப்பு…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.
ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன் தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

தமிழ் வளர யாது செய்ய வேண்டும்


பதிவை அச்செடு பதிவை அச்செடு

நாளைக்கு தமிழ் என்ன ஆகப்போகிறது என்று யோசிக்கும் முன்னர் தற்போது தமிழ் எப்படியிருக்கின்றது என்று கொஞ்சம் யோசிப்போமா? தமிழ்த்தாயின் பயோடேட்டா முத்தமிழ்க்குழுமத்திலேயே ஒரு இழையில் கொடுத்திருந்தார்கள் அதில் சொல்லப்பட்டிருந்தவை ஆணித்தரமான நிஜம். தமிழ் இப்போது செம்மொழி அந்தஸ்த்து அடைந்திருக்கின்றது. செம்மொழி என்றால் என்னவென்று என்னைக் கேட்காதீர்கள் கண்டிப்பாக ஒரு தமிழறிஞர் பதிலளிக்க வேண்டிய பாமரனுக்குப் புரியாத கேள்வி அது. ஆனால் செம்மொழி அந்தஸ்த்து என்பது தமிழுக்கு எந்தவிதத்திலும் உபயோகப்படாது. தமிழ் மொழியை தமிழர்களே கெடுத்தும் பேசாமல் மறைத்தும் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அன்பு நண்பர்களே, நண்பிகளே,
உங்களனைவருக்கும் எனது இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேவை!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

உங்களனைவருக்கும் நான் இன்னொரு அற்புதமான தமிழ் வலைத்தளம் விக்கிபீடியா முறையில் வைத்துள்ளது தெரியும் என்று நினைக்கின்றேன். தெரியாதவர்கள் தயவு செய்து தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தை சென்று காணுங்கள்.
இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் அற்புத மொழியான தமிழை இழக்க விரும்பாத என்னைப் போன்ற தமிழ் மொழிப்பிரியர்கள் அணைவரும் இந்த வலைத்தளத்தை உபயோகிக்கலாம். இது அணைவரும் மாற்றங்களை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் (சில [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்


பதிவை அச்செடு பதிவை அச்செடு

பாரதி ஒரு அற்புதமான கவிஞன். அவனுடைய கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு மகாகவி இந்த உலகத்தில் வாழும்போது அவனுக்கு ஒன்றுமே இந்த உலகம் கொடுக்கவில்லை. மிகவும் வறுமையில் வாட விட்டது. அது மட்டுமில்லாமல் ஓட ஓடவும் விரட்டியது. அவன் ஆசைப் பட்ட எதுவுமே அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் ஆசைப்பட்டது என்னவென்று இந்தக் கவிதையில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கின்றான்.
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

பாரதியின் வழியில்…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

சொல்லப் போனால் பாரதி போன்ற கவிஞரும் இல்லை அவனைப் போன்ற வேகமும், அறிவும், தெளிவும் அமைந்தவர்களும் இல்லை. அவன் ஒரு அதியம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பல கஷ்டங்களே அவனை மிகவும் அறிவுடையவனாக படைத்தது என்பேன்.
என்னுடைய வாழ்க்கையும் கொஞ்சம் அவனைப் போன்றதுதான். எனக்கும் வாழ்க்கை மிகவும் கொடிய முகங்களைக் காட்டியிருக்கின்றது. ஆனால் அதுதான் ஒரு வேளை இன்று நான் இருக்கும் நல்ல நிலைமைக்கும், கொண்டிருக்கும் கணினி அறிவுக்கும் காரணம் என்று நினைக்கின்றேன்.
வாழ்க்கை தன்னை மிகவும் துன்புறுத்தும்போதும் அதை [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

திருவாசக வாழ்த்து!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தக் கவிதைகள் பக்கத்தை எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானுக்கான போற்றியாக ஆரம்பிக்கின்றேன். (அட, என்னுடைய கவிதைகள் தான் இங்கே இருக்கும் என்று நினைத்தீர்களா? மற்ற எனக்குப் பிடித்தவர்களின் கவிதையும் இருக்கும். ஆனால் யாருடையது அது எனும் குறிப்பும் இருக்கும்).
இங்கே திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள்!
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
[விளக்கம்:]
நமச்சிவாயம் எனும் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை