ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » விமர்சனங்கள்

விமர்சனம்: நான் கடவுள்
‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே நான் நானாக இல்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்புதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) படத்தைப் பார்த்ததில் ஏற்கனவே பிச்சைக்காரர்களின் கடின வாழ்க்கையைப் பார்த்து மனம் நொந்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. என் பார்வையில் இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பிச்சைக்காரர்களின் நிதர்சன வாழ்வை இப்படி யாரும் படம் பிடித்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தின் இயக்குநர் பாலாவிற்கு என்னுடைய மரியாதையான தலை வணங்கல்கள்…

கதை என்று பார்த்தால் அவ்வளவு பிரமாதம் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். ஜோசியத்தை கண்மூடித்தனமாக நம்பும் இன்றைய பழமைவாதி மூட நம்பிக்கை பேர்வழிகளில் ஒருவரான ஒரு தந்தை ஜோசியர் கூறியதை நம்பி தன் குடும்பத்திற்கு ஆபத்து என்று கருதி தன்னுடைய தலை மகனை காசியில் கொண்டு சென்று 10 வயதில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றார். அதன் பிறகு அவருக்கு புத்தி வருவதற்கு 18 வருஷங்கள் ஆகிவிட, தன்னுடைய மகனைத் தேடி தன்னுடைய மகளுடன் காசி பயணிக்கும் அவர் தன்னுடைய மகன் ருத்ரன் (ஆர்யா) இத்தனை வருஷங்களில் காசியின் அகோர சாமியார்களில் (இதைப் பற்றி பின்னே) ஒருவராக மாறிவிட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார் (புண்ணிய பூமி காசியில் வேறு என்ன எதிர்பார்த்தார் தெரியவில்லை). அவருடைய குருவிடம் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து மகனை வீட்டுக்கு அழைத்துவருகின்றார். ஆனால் அனுப்பும்போதே குரு, “உனக்கு சொந்த பந்தங்கள் எதுவும் கிடையாது, சென்று முறித்துக்கொண்டு வா” என்று ஆசீர்வதித்து(?) அனுப்புகின்றார்.  வீட்டிற்கு வரும் மகனின் வித்தியாசமான தோற்றமும், நடையும், பேச்சுகளும் பார்த்து அதிர்ச்சியடையும் அம்மா அவனை வழிக்கு கொண்டு வர முயன்று தோற்றுவிட, வீட்டைவிட்டு வெளியேறும் மகன் சந்நியாசி பிச்சைக்காரர்கள் மற்றும் கஞ்சா குடிக்கும் சந்நியாசிகள்(?) புழங்கும் ஒரு ஆலயத்தில் போய் தங்கிவிடுகின்றார். இதற்கிடையில் பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பலொன்று தங்களுடைய அநியாயங்களை அன்றாடம் நிகழ்த்திவர அதை பொறுத்துக்கொண்டு தங்களுடைய சோகங்களை நகைச்சுவையால் மூடிக்கொண்டு வாழ்கின்றனர் பிச்சைக்காரர்கள். இதில் திடீரென்று ஒரு கண்தெரியாத பிச்சைக்கார பாடகி அம்சவள்ளி (பூஜா) அந்தப் கும்பலால் கடத்திக்கொண்டு இவர்களுடன் பிச்சையெடுக்க விட்டுவிடப்பட படத்தில் ஒரு திருப்பம். இதற்கிடையில் மகளின் மஞ்சள் நீராட்டுதலுக்காக மகனை மீட்டு வர ஆலயம் செல்லும் தாய் தன்னுடைய மகனிடம் திரும்பி வருமாறு மன்றாட அவளுக்கு மகன் சித்தரின் பாடலில் ஒன்றைப் பாடிக்காட்டி, நாடி மொத்தமும் அடங்கும்படியான ஒரு கேள்வியையும் கேட்க சுயம் சுட்டுவிட்ட தாய் மகனை தலைமுழுகுகின்றாள் (இதைப் பற்றி பின்னே). இதற்குள் மலைநாடான கேரளாவிலிருந்து இதேபோல் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் ஒரு ஆள் பண்டிகை தருணங்களின் பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் சீசனுக்காக வேண்டி அதிக ஆள் வேண்டும் என்று இந்தக் கும்பலிடம் கேட்க, பணத்தை இந்த அளவிற்கு பார்த்திராத இந்தக் கும்பலும் தங்களிடம் தாயாய் பிள்ளையாய் பழகிக்கொண்டிருந்த பிச்சைக்காரர்களை பிரித்து அனுப்பிவிடுகின்றது. இதுவரை அமைதியாக சென்றுகொண்டிருக்கும் படத்தில் திடீரென்று அதே மலையாளத்தான் ஒரு அருவருப்பான முகம் கொண்ட பிச்சைக்காரனைக் கொண்டு வந்து அவனுக்கு கண்தெரியாத ஒரு பிச்சைக்காரியை மணமுடித்து வைத்தால் 10 இலட்சம் தருவதாக கூற, பணத்தாசையில் மூழ்கிய கும்பல் தங்களிடம் புதிதாய் சேர்ந்திருந்த அம்சவள்ளியைக் காட்டிவிடுகின்றனர். மலையாளத்தானிடமிருந்து தப்பிக்க ருத்ரனை அணுகும் அம்சவள்ளியால் தூக்கம் கலைந்த ருத்ரன் கெட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களை அடித்துப் புரட்டி எடுத்து அந்த மலையாளத்தானையும் கொன்றுவிடுகின்றார். ருத்ரன்தான் குற்றவாளி என்று தெரிந்தும் அவரைக் கைது செய்தும் அவருடன் போட்டி போட முடியாத போலீசார் அவர் நிரபராதி என்று விடுவித்துவிட இதற்குள் அம்சவள்ளியை தேடியலையும் கும்பலும் அவளைப் பிடித்து அடித்து துவம்சம் செய்துவிட்டு சாமியாரின் கதையையும் முடிக்க அவருடன் போரிட, ருத்ரன் எப்படி அவனையும் கொன்று அம்சவள்ளிக்கும் மோட்சம் கொடுத்தார் என்பது மீதிக்கதை.

கிட்டத்தட்ட மூன்று வருஷங்களாக கஷ்டப்பட்டு பாலா இந்தப் படத்தை எடுத்திருப்பதை படம் பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடிகின்றது. ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கின்றார். படப்பிடிப்பின் நேர்த்தியை பெரிய திரையில்தான் காண முடியும் சின்னத்திரையில் காண்பவர்கள் கண்டிப்பாக படத்தை இரசிக்க முடியாது. பிச்சைக்காரர்களையும் அகோர சாமியார்களையும் நடிக்க வைத்திருப்பதில் பாலாவின் கடின உழைப்பை பார்க்க முடிகின்றது. ஆனால் பாலாவிற்கே ஆன பிரத்தியோக ஸ்டைலை எப்போதுதான் மனுஷர் மாற்றிக்கொள்ளப் போகின்றார் என்ற ஒரு அயர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. கதையிலும் அவ்வளவாக அவரின் கவனம் செல்லவில்லை. ஆனால் படப்பிடிப்பிலும் இசையிலும் கவனத்தைக் கொண்டு சென்றதில் தமிழ் சினிமாவின் இன்னொரு மைல்கல்லை அவரால் உருவாக்க முடிந்திருக்கின்றது. ஆமாம், எவ்வளவோ குறைகள் இருந்தாலும் இந்தப் படம் தமிழுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே இன்னொரு மைல்கல்.

மூன்று வருஷங்களாக நடித்தது மட்டுமின்று மூன்று கதாநாயகிகள் மாறி மாறி நடித்ததில் ஆர்யாவின் கடின உழைப்பு வெட்ட வெளிச்சமாகின்றது. ருத்ரன் பாத்திரத்திற்கு பொருத்தமாக என்னால் விக்ரமையோ சூர்யாவையோ நினைத்தே பார்க்க முடியவில்லை (அதனால்தான் அவர்கள் இதில் நடிக்க விரும்ப வில்லையோ என்னவோ?). ஆர்யா தன்னுடைய பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றார். ஹேண்சமான ஆர்யாவா இது என்று பலமுறை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். தலைகீழாக அவர் செய்யும் யோகாசனங்கள் அற்புதம். மனிதர் கண்டிப்பாக கடும் உழைப்பைக் கொட்டியிருக்கின்றார். ஆனால் இது வீணாகாது என்பது நிச்சயம். இந்தப் படத்தில் நடித்தது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சி பூஜாவின் ஆழ்ந்த நடிப்பு. நடிப்பு என்றே சொல்ல முடியாத அளவிற்கு படத்தோடு ஒன்றிப்போய் நடித்திருக்கின்றார். பல இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கின்றார். கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய ஒப்பனையும் நடிப்பும் நான் எந்தப் படத்திலும் காணக்கிடைக்காதவை. அவருக்கு நல்ல எதிர்காலம் கண்டிப்பாக இருக்கின்றது.

இசையில் நான்தான் கடவுள் என்று இன்னும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார் இளையராஜா. இசை ஞானி பட்டத்திற்கு அச்சுப் பொருத்தம் அவர். தன்னுடைய ஈகோவை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தாரானால் இன்று எங்கோ சென்றிருப்பார் இளையராஜா. அவரிடம் திறமை இருந்தும் சில குணங்கள் இமய வளர்ச்சியை எவரெஸ்ட் அளவிற்கு குறைத்துவிட்டன. பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் அசத்தியிருக்கின்றார் இளையராஜா. இளையராஜாவும் யேசுதாஸும் சேர்ந்து ரொம்ப நாளுக்கு அப்புறம் செய்துள்ள ‘பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…’ பாடல் கண்களில் நீரை வரவழைத்துவிடுகின்றது. முழுவதும் சமஸ்கிருதத்திலேயே அமைந்துள்ள பாடலும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளையராஜாவின் மயக்கும் குரலில் அமைந்துள்ள ‘ஓரு காற்றில் அலையும் சிறகு…’ மயங்க வைத்திருக்கின்றது.

படத்தில் நடித்துள்ள பிச்சைக்கார சிறுவர் சிறுமியர் மற்றும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசத்தியிருக்கின்றார்கள். சோகத்தைப் பிழியும் காட்சிகளிலும் மெல்லிய நகைச்சுவையை கொடுத்து காட்சிகளின் உக்கிரத்தைக் குறைத்திருக்கின்றார் பாலா. இதைப் பற்றி பலர் வேறு விதமாக விமர்சனம் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை பாலாவை பாராட்ட வேண்டிய விஷயம் இது. வெறும் மெலோடிராமாடிக்காக இல்லாமல் செய்ய நகைச்சுவையை கையாண்டிருப்பது மற்ற இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

கதையும் வசனமும் ஜெயமோகன் என்றபோதே சூடாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் மனிதர் தன்னுடைய கோபங்களுக்கெல்லாம் இந்தப் படத்தை ஒரு வடிகாலாக்கியிருக்கின்றார் என்பதைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். சில சித்தர் பாடல்களை தவறாக கையாண்டிருப்பது மட்டுமின்றி தன்னுடைய தனிப்பட்ட ஆத்திரங்களுக்கும் பெருமைகளுக்கும் படத்தை அவர் பலியிட்டிருக்க வேண்டாம். ஒரு சில இடங்களில் வசனம்

காசியின் உண்மையான உக்கிரங்களை காட்டாமல் மறைத்துவிட்டதற்காக பாலாவை பாராட்ட வேண்டும். இல்லையென்றால் அதைப் புண்ணிய பூமி என்று கருதிக்கொண்டிருக்கும் பல ஹிந்துக்களின் இதயங்கள் வெடித்துவிட்டிருக்கும். பிணங்களை எரிப்பது வரைக்குமாவது உண்மையாக காண்பித்திருந்தார். காசியின் இன்னொரு அங்கம் அகோர சாமியார்கள். இவர்களைப் பற்றி எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த வரையில் இங்கே கொடுக்கின்றேன். காசி என்கிற புண்ணிய(?) ஸ்தலத்தில் சென்று எரித்தால்தான் மோட்சம் கிடைத்து மறுபிறவி இல்லாமல் போகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையின்(?) காரணமாக இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து கொண்டு வரப்படும் வயசான நபர்களுக்கு இறப்பும், இறந்து போனவர்களுக்கு மோட்சமும் கொடுத்து எரிக்கும் ஒரு சாமியார் கும்பல்தான் அகோர சாமியார்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக காசியை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு, குடும்ப பந்தங்களிலிருந்து தங்களை நீக்கிக்கொண்டு, இறந்தவர்களின் சாம்பலை உடலில் பூசி ருத்ரமாக்கிக்கொண்டு, சிவனின் இன்னொரு அவதாரமான கால பைரவனாக தங்களை கருதிக்கொண்டு, கஞ்சா அடித்துக்கொண்டு, கிடைத்த கெட்டவர்களை போட்டு அடித்து துவம்சம் செய்துகொண்டு வாழ்பவர்கள். கெட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் கெட்டவர்கள் என்பதை இவர்களால் கண்டுகொள்ள முடியும் என்பதும் ஒரு நம்பிக்கை(?). இவர்களை பாலா ஒரிஜினலாக படம்பிடித்திருக்கின்றார் என்றாலும் இவர்கள் எவரும் நமக்கு எவ்விதத்திலும் பரிச்சியமான சந்நியாசிகளே இல்லை.

பாலாவின் வழக்கமான போலீஸ் நையாண்டி இதிலும் இருக்கின்றது. அது மட்டும் போதாதென்று சாமியார்களையும் நையாண்டி செய்திருக்கின்றார். கஞ்சா அடித்துக்கொண்டு போலீசுக்கு பயந்து வாழும் சாமியார்களை சந்நியாசிகள் என்று நினைத்துப் பார்க்கவே மனம் கூசுகின்றது. மௌன சாமியாராக வரும் நபரின் பாத்திரமும் ஒரு சந்நியாசிக்குரியதாய் இல்லை. மொத்தத்தில் ஒன்று பாலாவிற்கு சந்நியாசிகள், சித்தர்கள் என்றால் யார் என்று தெரியவில்லை அல்லது அவர்களின் மேல் அவருக்கு ஏகப்பட்ட கோபம் இருந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சந்நியாசி என்று இன்றுக் கூறிக்கொள்பவர்கள் எவரையுமே பொறுத்துக்கொள்ள முடியாது. சித்தர்களை நான் என்றுமே மதித்திருக்கின்றேன். அவர்களை சந்நியாசிகளோடு ஒப்பிடுவது இறைவனை பூசாரிகளுடன் ஒப்பிடுவதற்கு சமம். அவர்களையும் தவறாக கையாண்டிருப்பது பாலாவின் (ஜெயமோகனின்?) இமாலயத் தவறு. அதேபோல் கடவுளைப் பற்றிய கோபம் இருவருக்குமே நிறைய இருப்பது தெரிகின்றது. ஆனால் இருவருக்குமே கடவுள் என்பது யார் அல்லது எது என்பதைப் பற்றிய கடுகளவு ஞானமும் இல்லை என்பதும் தெளிவாகின்றது. என்னைப் பொறுத்தவரை ‘எது ஒன்றைப் பற்றி உனக்குத் தெரியாதோ, எது ஒன்றைப் பற்றி உனக்கு முழு ஞானம் இல்லையோ, அதைப் பற்றி பேசுவதற்கு நீ தகுதியில்லாதவன்’ என்கிற கீதை வாக்கியம் சத்தியம். அதையும் இவ்விருவரும் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு காட்சியில் கடவுளையே தேவடியாப்பையன் என்று திட்டுவது அசட்டுத்தனத்தின் உச்சக்கட்டம். கடைசிக் காட்சியில் அதே போல அம்சவள்ளி நீண்ட வசனத்தில் அனைத்து கடவுள்களையும் இழுத்து நான் இப்படி இருப்பது அவர்களுக்கெல்லாம் பெருமையா என்று கேட்பதும் சிறுகுழந்தைத் தனமாகவே இருக்கின்றது.

நான் மிகவும் மதிக்கும் சித்தர்களை, அவர்களின் பாடல்களை இவர்களிருவரும் கண்ணா பின்னா என்று பயன்படுத்தியிருப்பதும் எனக்கு ஒரு கோபமே (உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் தப்பில்லை, இது என்னுடைய கருத்து மட்டுமே). உச்சகட்டமாக ஒரு காட்சியைச் சொல்லலாம். தன்னுடைய மகள் வயதுக்கு வந்த சந்தோஷமான செய்தியைக் கூறி மகனை அழைத்துவர நம்பிக்கையோடு புறப்படும் அம்மா மகனிடம் பிச்சையெடுக்காத குறையாக அழுது மன்றாடி வீட்டுக்கு வர வேண்டும்போது சட்டைசெய்யாமல் இருக்கும் மகனைக் கண்டு தாய், ‘நான் உன்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாடா, அதுக்காகவாவது வரக்கூடாதா?’ என்று கேட்கும்போது, சித்தர் பாடலான, “ஐந்திரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே, கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே, உடம்பாவது ஏதடி, உயிராவது ஏதடி, உடம்பாய் உயிரெடுத்த உண்மை ஞாநி நானடி!” என்று பாடிக்காட்டிவிட்டு, “தூமை என்றால் என்னவென்று தெரியுமில்லடி?” என்று கேட்கும் கேள்வியில் சுயம் சுட்டுவிட கூசிப்போகும் தாய் திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குச் சென்று தலைமுழுகும் காட்சிதான் அது. தாய்மையை இதைவிட கேவலமாக இன்னொருவர் சித்தரிக்கவே முடியாது. உலகில் தாயிற்கு இருக்கும் ஸ்தானத்தை அறிந்த நம் முன்னோர்கள், ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்று மாதாவைத்தான் முதலில் வைத்து சென்றார்கள். அவர்கள் கூறியதை இந்த இரு ஞான சூண்யங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம் அதை விட்டுவிட்டு பலபேர் பார்க்கும் சினிமா போன்ற ஒரு மீடியாவில் இப்படி தங்களின் ஊணங்களை காண்பித்திருக்கத் தேவையில்லை.

பிரம்மிக்க வைத்த பாலாதான் இப்படி பல குறைகளில் அசிங்கப்படவும் வைத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது எப்படி ஒரே படம் இயமத்திற்கும் அதள பாதாளத்திற்கும் காட்சிகளை வைக்க முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் சிறிதளவாவது தன்னுடைய அலட்சியத்தை ஒதுக்கி வைக்கப் பழகாவிட்டால், எதிர்காலத்தில் அவரை நினைவு கூறுபவர்கள் அவருடைய தவறான முறைகளுக்காகவே நினைவு கூறி அவருடைய நினைவுக்கே இழிவு செய்ய நேரிடும்.

விமர்சனம்: குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire)
இந்தப் படம் இந்தியர்களை முதலில் திரும்பிப் பார்க்க வைத்து இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. உலக சினிமா நட்சத்திரங்களின் கனவு விருதான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ஆகாடமி விருதுகளில் 2008 வருஷத்திற்கான 8 விருதுகளை வென்றதுதான் இன்று உலகமே திரும்பி பார்ப்பதற்கு காரணம். விருது வாங்கிய படம் என்றாலே சிலவற்றை தவிர்த்து பொதுவாக விமர்சனங்கள் நேர்மையாக வருவதில்லை. அந்தச் சிலவற்றுள் அடங்குப்படியான ஒரு திறந்த விமர்சனம் இது.

விமர்சனத்திற்கு போவதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றிய சில பிண்ணனிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

2005 ஆம் ஆண்டில் விகாஸ் ஸ்வரூப் என்ற இந்தியர் எழுதிய Q & A என்ற நாவல் வெளிவந்தது. இந்த நாவலை அடிப்படையாக கொண்டுதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற இந்தப் படம் உருவானது.

இந்தப் படத்தை இயக்கியவர் டானி பாயல் என்கிற பிரிட்டிஷ் இயக்குநர். இந்தப் படத்தில் வேலைசெய்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷாராக இருக்க நடித்தது மொத்தமும் இந்தியர்கள் அதிலும் அனில் கபூர் மற்றும் இர்பான் கானைத் தவிர பெரும்பாலானவர்கள் அறிமுக நட்சத்திரங்களே.

மெளனமாக பல்வேறு விருதுகளை குவித்துக்கொண்டிருந்த இந்தப் படம் பாஃப்டா என்கிற (BAFTAA – British Academy of Film and Television Arts Awards) பிரிட்டிஷாரின் உயரிய விருதை வாங்கியதும் பலபேரின் கவனத்தை ஈர்த்தது. இதில் படத்தில் இசையமைத்திருந்த தமிழக இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் சிறந்த இசைக்கான விருதை வாங்கியதும் இந்தியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இசைக்கான இந்த விருதை வென்றிருக்கும் முதல் இந்தியரும் தமிழரும் இவரே.

அதன் பிறகு உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் என்றழைக்கப்படும் அகாடமி விருது இவருக்கும் படத்திற்கும் கிடைக்குமா என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்க்க, ஆச்சரியமாக படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றதோடு மட்டுமில்லாமல் இன்ப அதிர்ச்சியாக ஏ. ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் (ஒன்று தனியாக இன்னொன்று பாடலாசிரியருடன் இணைந்து) மற்றும் இரண்டு இந்தியர்களுக்கும் விருதுகள் என்று வென்று குவித்தது. விருது வென்ற மற்ற இரண்டு இந்தியர்கள், ரெசுல் பூக்குட்டி (இசையமைப்பிற்காக இரண்டு பேருடன் சேர்ந்து வென்றிருந்தார்) மற்றும் சம்பூரண் சிங் குல்சார் (ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்த பாடலாசிரியர்). இந்த விருதுகள் படத்தை இந்தியர்களின் கனிசமான கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

இனி, கதைக்கு…

எடுத்தவுடன் ஒரு காவல் நிலையத்தில் காவலதிகாரி ஒரு இளைஞனை சித்ரவதை செய்கின்றார். என்ன ஏது என்று புரியும் முன்னர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இர்ஃபான் கான் வருகின்றார். அந்தப் பையனை இரவெல்லாம் விசாரித்தும் ஒன்றும் கூறமாட்டேன் என்கின்றான் என்று காவலதிகாரி புகார் கூறியபின் பையனை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் அவருக்கு பதில் கூறும் கதாநாயகன் ஜமால் மாலிக் (தேவ் படேல்) என்று கதை விரிகின்றது.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோடீஸ்வரனாக விரும்புவது யார்? (Who Wants to be a Millionaire) தொலைகாட்சி நிகழ்ச்சியின் இந்தியத் தயாரிப்பான கோன் பனேகா குரோர்பதி? (कौन बनेगा करोड़पति) நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் தன்னை ஒரு அலுவலகத்திலிருப்பவர்கள் டீ வழங்கும் பையனாக அறிமுகப்படுத்திக்கொள்ள ஆச்சரியமாகின்றார் நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூர். அறிவுக்கு மிகவும் வேலை வைக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு கேள்வியாக நான்கு விடைகளுடன் கேட்கப்படும். சரியான விடையை சொல்லச் சொல்ல படிப்படியாக பணம் உயர்ந்துகொண்டே சென்று உச்சகட்டமாக 10 கோடி ரூபாய் கொடுக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சியில் ஒரு டீ வழங்கும் பையன் எப்படி கலந்துகொள்ளப் போகின்றான் என்று அனைவரும் ஆர்வமாக, கேட்கின்ற ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்துவிடுகின்றான் ஜமால். ஒரு கட்டத்தில் மிகவும் கஷ்டமான ஒரு கேள்விக்கு நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறி விளம்பர இடைவேளையின் போது தவறான பதிலை கொடுக்கும் அனில் கபூர் அதையும் மீறி ஜமால் சரியான பதிலைக் கூறியதைப் பார்த்து இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்று சந்தேகப்பட்டு நிகழ்ச்சியின் உச்சகட்டமான 10 கோடீ ரூபாய் கேள்வியின்போது அன்று முழுவதுக்குமான இடைவேளை விட்டு ஜமாலை போலீஸிடம் ஒப்படைக்கின்றார்.

இன்ஸ்பெக்டர் விசாரிக்க விசாரிக்க ஒவ்வொரு கேள்விக்கும் அவனுடைய வாழ்க்கையின் மூலமே பதில்களை அவன் அறிந்திருந்த விதத்தை ஜமால் விளக்குகின்றான்.

மும்பை நகர தாராவி பகுதி குப்பத்தில் வசிக்கும் ஜமால் மாலிக் மற்றும் சலீம் மாலிக் (மதுர் மிட்டல்) சகோதரர்களின் அமைதியான வாழ்க்கையில் மும்பைக் கலவரம் குறுக்கிட அதில் தாயை இழக்கும் இருவரும் கலவர கும்பலில் இருந்து தப்பித்து ஓட அவர்களுடன் இன்னொரு அநாதையாகிய லத்திகா (ஃப்ரீடா பின்டோ) என்கிற சிறுமியையும் ஓடுகின்றாள். அவளை சேர்த்துக்கொள்ள மறுக்கும் அண்ணன் சலீமை சமாதானம் செய்து தம்பி ஜமால் அவளுக்கு அடைக்கலம் கொடுக்க இருவருக்கும் இடைய அரும்புகின்றது அன்பு. அநாதையான இந்த மூவரையும் மற்றும் சில சிறுவர் சிறுமிகளையும் நல்ல சாப்பாடு, இருக்க இடம், உடுக்க உடை கொடுப்பதாக வாக்களிக்கும் மாமன் (அங்குர் விகல்) என்கிற மனிதன் அழைத்துச் செல்கின்றான். ஆனால் அவனும் இவர்களை வேலை வாங்க வாய்ப்பை பிடித்துக்கொண்டு சலீம் அந்த மனிதனும் இணைந்து சிறுவர் சிறுமிகளை வேலை வாங்குகின்றான். இதனாலேயே அவனுடன் நெருக்கமாகும் சலீம் ஒரு நாள் அந்த மனிதன் தன்னுடைய சக சிறுவர்கள் சிலரை பாடச் சொல்லிக் கேட்டு நன்றாக பாடுபவர்களை மட்டும் தனியாக அழைத்துக்கொண்டு செல்வதை காண்கின்றான். நன்றாக பாடினால் நல்லபடியாக கவனித்துக்கொள்வான் என்று நினைக்கும் லத்திகாவும் ஜமாலும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, நன்றாக பாடும் சிறுவர்களின் கண்களின் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி குருடாக்கி பிச்சையெடுக்க வைக்கும் அந்த மனிதனின் குரூர எண்ணத்தை கண்டுபிடிக்கும் சலீம் அதிர்ந்து போய் ஜமாலை தப்பாக பாடுமாறு எச்சரிக்கின்றான். ஆனால் தன்னுடைய முன்னேற்றத்தை தடுக்கவே அண்ணன் அப்படி கூறுகின்றான் என்று நினைத்துவிடும் ஜமாலால் நிலமை கையை மீறி போய்விட இருவரையும் காப்பாற்ற மாமனிடமிருந்து தப்பிக்க வைக்கின்றான் சலீம். ஆனால் தப்பித்து இரயில் ஏறும்போது வேண்டுமென்றே லத்திகாவின் கையை பிடிக்காமல் விட்டுவிட அவள் மட்டும் மாட்டிக்கொண்டுவிடுகின்றாள். அவளையே நினைத்து உருகும் ஜமால் வேறு வழியின்றி அண்ணனின் வழிப்படி நடக்க, டெல்லிக்கு வரும் இருவரும் சின்னச் சின்ன திருட்டுகள் அப்புறம் டூரிஸ்ட் கைடுகள் என்று பல பரிணாமங்கள் எடுக்க ஒரு சமயம் தன்னுடைய சக சிறுவன் ஒருவன் பிச்சையெடுக்கும் போது கவனிக்கும் ஜமால் அவனிடம் லத்திகா ஒரு விபச்சார விடுதியில் நடனம் ஆடுவதைப் பற்றி அறிந்து சலீமை கூப்பிட்டுக்கொண்டு அங்கே செல்கின்றான். அங்கே அவர்கள் லத்திகாவை சந்தித்து மீட்டுப் போகும் நேரம் மாமன் வந்துவிட வேறு வழியின் அவனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான் சலீம். இதில் தப்பித்தபின் லத்திகா தனக்கே சொந்தம் என்று சண்டை போடும் சலீம் ஜமாலை வெளியே அனுப்பிவிட ஜமாலை கொன்றுவிடுவதாக கூறும் அவனுடைய மிரட்டலுக்கு பயந்து லத்திகாவும் சம்மதிக்கின்றாள். சலீம் ஒரு தாதாவிடம் சென்று அடியாளாக சேர்ந்துவிட, ஜமால் ஒரு அலுவலகத்தில் எடுபிடி பையனாக வேலை செய்கின்றான். வருடங்கள் நகர எதேச்சையாக அண்ணன் சலீமை சந்திக்கும் ஜமால் அவனைத் தொடர்ந்து சென்று தாதாவின் மனைவியாகியிருக்கும் தன்னுடைய காதலி லத்திகாவை கண்டுபிடிக்கின்றான். அந்த வீட்டில் சமையல்காரனாய் நுழையும் அவன் லத்திகாவிடம் பேசும் போது அவளும் தன் மேல் இன்னமும் காதலாயிருப்பதும் இருப்பினும் தாதாவிற்கு பயந்து அவனுடன் வாழ்வதையும், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ‘கோடீஸ்வரனாக விரும்புவது யார்’ என்கிற தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்ப்பதையும் அறிந்து அங்கிருந்து வெளியேறுகின்றான். காதலியை மீட்க அவன் எடுக்கும் ஒரு முயற்சியும் சலீமால் முறியடிக்கப்பட வேறு வழியின்றி அவளுடைய கவனத்தை கவரவும் அவளை அடையவும் அவளுக்காக அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றான் ஜமால். இந்தக் கதையில் நடக்கும் சில சம்பவங்களே அந்தப் போட்டியின் கேள்விகளுக்குப் பதிலாகவும் ஆகிவிட உச்சகட்டத்தையும் நெருங்கிவிட்டான்.

ஜமாலின் பதில்களில் உண்மையை அறியும் இன்ஸ்பெக்டர் எதனால் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றாய் என கடைசியாக கேட்க, தன்னுடைய காதலி இந்தப் படத்தை பார்ப்பாள் என்றும் அவளுடைய கவனத்தைக் கவரவே இந்தப் போட்டியில் தான் கலந்துகொள்வதாகவும் சொல்லி நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றான் ஜமால். அதன் பிறகு அவனை நல்லவனென்று போலீஸ் திரும்பவும் ஒப்படைக்க அதற்குள் நிகழ்ச்சியின் உச்சகட்டத்தைக் காண நாடே தொலைகாட்சி பெட்டியின் முன்னால் தவமிருக்கின்றது. இதற்குள் ஜமால் மற்றும் லத்திகாவின் அசைக்க முடியாத காதலை உணர்ந்த சலீம் அவளிடம் தன்னுடைய மொபைலையும் காரையும் கொடுத்து தப்பிக்க வைக்கின்றான். அதை அறியும் தாதாவின் ஆட்களால் கொலையும் ஆகின்றான். அதேசமயம் நாடே தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் வீற்றிருந்ததால் டிராபிக் ஜாமாகிவிட காரைவிட்டு வெளியேறும் லத்திகா அருகிலிருந்த தொலைகாட்சிப் பெட்டியின் மூலம் ஜமால் தனக்காக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தெரிந்துகொண்டு கவனிக்கின்றாள். ஜமாலுக்கு கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை. அவன் யாராவது ஒரு தெரிந்த நபருக்கு போன் செய்யலாம் என்று வாய்ப்பு கொடுக்கப்பட, அதை பயன்படுத்தி தனக்குத் தெரிந்த ஒரே எண்ணான சலீமின் எண்ணுக்கு அழைக்கின்றான் அவன். சலீமின் மொபைல் தன்னிடமுள்ளதை உணரும் லத்திகா ஓடிப்போய் அதை எடுக்க இருவரும் சந்தோஷமாக பேசிக்கொள்ள முடிகின்றது. ஆனால் லத்திகாவிற்கும் அந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஜமால் அந்தக் கேள்விக்கும் சரியான பதிலை கொடுத்தானா, 10 கோடி ரூபாய்க்கு அதிபதியானானா, அவனுடைய காதலியை அடைந்தானா என்கிற கேள்விகளுக்கு மீதிக் கதை பதிலளிக்கின்றது.

இனி, விமர்சனத்திற்கு…

ஏழைச் சிறுவர் சிறுமியராக நடித்தவர்களை பாராட்டியே ஆகவேண்டும். அறிமுகங்கள் என்ற உணர்வே இன்றி அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்களின் நடிப்பும் உணர்வுகளின் வெளிப்பாடும் ஐயோ என்று ஆச்சரியப்பட வைக்கின்றன. ஒவ்வொருவரும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்ததில் திரையில் நம்பமுடியாத காட்சிகள் நிஜமாய் விரிகின்றது.

நமக்கெல்லாம் அவ்வளவாக அறிமுகமில்லாத குடிசை வாழ் மக்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை ஆட்டி வைக்கும் தாதாக்கள் என்று ஒரு ஏழாவது உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கின்றார் இயக்குநர். காமிராவின் கோணங்களும் அது பிடிக்கும் நிகழ்வுகளும் ஆச்சரியமான நிஜங்களாய் நம்முன் விரிகின்றன. தொழில்நுட்ப வல்லுநர்களின் கடின உழைப்பை படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் காட்டுகின்றது.

ஏ. ஆர். ரஹ்மானின் பின்னிசையின் அருமையை நான் கூறவேண்டிய தேவையே இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் நிரூபித்துவிட்டன.

இந்த ஏழாவது உலகத்தை இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவிலேயே முதல் தடவையாக இவ்வளவு நிதர்சனமாகவும் நிஜமாகவும் காண்பித்து இருக்கிறார் இயக்குநர் என்று சொல்லிவிடலாம். ஆனால் தமிழ் இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ அந்த கூற்றைப் பொய்யாக்கிவிட்டது. அந்தப் படத்தைப் பற்றி இன்னொரு விமர்சனம் எழுதுகின்றேன். அதைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் மிகவும் குறைவானது போல் தோன்றுமளவிற்கு அதில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றது இந்த ஏழாவது உலகம்.

இவ்வளவு விருதுகளை குவித்த படம் என்றாலும் சில குறைகள் இல்லாமலில்லை. குறைகள் இல்லாமல் திரைப்படம் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மிக மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அதிசயம்.

சேரியில் வாழும் கல்வியறிவு இல்லாத சிறுவர்கள் ஆங்கிலம் தெளிவாக பேசுவது, அமிதாப் பச்சனின் கையெழுத்தைப் பெறுவதற்காக உயிரைக் குடிக்கும் துர்நாற்றம் அடிக்கும் கழிவுகளின் சாக்கடையில் சிறுவன் ஜமால் குதிப்பது, அதைத் துடைக்கக் கூட செய்யாமல் அப்படியே சென்று அமிதாப்பிடம் கையெழுத்து வாங்குவது, அதை சுற்றியிருக்கும் பாதுகாவலர்களும் அனுமதிப்பது, இந்தியாவின் புகழ்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சர்வசாதாரணம் என்பது போல காண்பிப்பது, இது போன்ற லாஜிக் மீறல்களை அனுமதிக்காமலிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

படம் தழுவிய நாவலிலிருந்து வழக்கம் போல பல விஷயங்கள் மாற்றப்பட்டிருப்பதும் ஒரு குறை. ஏன் எந்த இயக்குநரும் நாவலில் இருக்கும் கதையை அற்புதமாக வடிக்கத் தவறுகின்றார்கள்? (என்னைப் பொறுத்தவரை பீட்டர் ஜாக்சன் அந்த விஷயத்தில் எவ்வளவோ தேவலை, பேசாமல் ஹாரி பாட்டரையும் அவரிடம் கொடுத்திருக்க வேண்டும்). இதில் நாவல் எழுதிய விகாஸ் ஸ்வரூப் அவர்களே வருத்தப் பட்ட விஷயம் அவருடைய கதாநாயகனின் உண்மைப் பெயரான ராம் முகம்மது தாமஸ் என்பதை ஜமால் மாலிக்காக மாற்றிவிட்டது. இதனாலேயே மதச்சாயல் பூசப்பட்டு பல எதிர்ப்புகளுக்கும் இந்தப் படம் காரணமானது. இருப்பினும் இப்போது விருதுகளின் மத்தியில் அதை நினைப்பவர்கள் மிகவும் குறைவு. அதோடில்லாமல், இந்தியாவை இவ்வளவு அசிங்கமாக ஒரு வெளிநாட்டு இயக்குநர் (அதுவும் நம்மை ஒரு காலத்தில் ஆண்ட பிரிட்டிஷ் வம்சத்தை சேர்ந்தவர்) எப்படி எடுக்கலாம் என்றும் சில எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன. விருதுகளின் சப்தத்தில் அவைகளும் அடங்கிவிட்டது போலிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை இதைவிட மோசமாக நான் கடவுள் படத்தில் நம் நாட்டு இயக்குநர் பாலாவே காட்டிவிட இந்த எதிர்ப்பு அர்த்தமற்று போய்விட்டது.

இது போன்ற சில குறைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் படம் அற்புதமான படம். ஆஸ்கார் விருதுக்கும் ஏற்ற படமே.

உங்களின் கருத்துக்களை இங்கே வழங்குங்கள்…

வாரணம் ஆயிரம் – ஒரு திறந்த விமர்சனம்
வாரணம் ஆயிரம் படம் பற்றிய இணையக் குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன். ஆனால் ஒரு நல்ல விஷயம், அந்த விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால் படத்திலிருந்த அபத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை அவர்கள் விட்டுவிட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம் நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும் பழக்கம் உள்ள நான் இனிமேல் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததுதான். ஒரு வேளை தசாவதாரமும் எனக்கு பிடிக்காமலே போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாம் விமர்சனங்களை படித்துவிட்டு பின் படம் பார்க்கும்போது அந்தந்த விமர்சகர்களின் கருத்துக்கள் நம் மனதில் அடிக்கடி தலைகாட்டி படத்தை நமக்கு பிடித்த வகையில் பார்க்க இயலாமலேயே போய்விடுகின்றது.

இந்த விமர்சனத்தையும் படம் பார்த்தவர்கள் மட்டுமே படிக்கும்படி (அவர்களுடைய நல்லதுக்காகத்தான்) வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். எனக்கு பிடித்த நான் இரசித்த வரையிலேயே இந்த விமர்சனம் அமைந்திருப்பதால் உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையெனில் தயவு செய்து அதைப் பற்றி பேச வேண்டாம்.

தமிழ் சினிமாக்களை மட்டும் என்று இல்லை, உலக சினிமா அனைத்திலுமே நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், சினிமா என்று வந்துவிட்டால் லாஜிக்குகள் என்று கூறப்படம் அர்த்தங்களை நாம் அதிகம் கவனிக்கக்கூடாது. சினிமா என்பதே ஒரு பேன்டசிதான். பேய்ரி டேல் (Fairy Tale) என்று கதைகளில் ஒரு பிரிவு உண்டு. இது நாம் சின்ன வயதிலிருந்து அம்மா, பாட்டி, அப்பா, ஆசிரியர் என்று பலரிடம் கேட்ட கதைகள்தான். ஆனால் அதில் எந்தக் கதையிலும் அபத்தங்கள் இல்லாமல் இருந்ததில்லை. இருப்பினும் நம்மால் அந்தக் கதைகளை மறக்கவோ இரசிக்காமலோ இருக்க முடியாது. அதற்கு காரணம் அந்தக் கதை நம்மில் ஏற்படுத்தும் பாதிப்புதான். சின்ன வயதிலேயே சில நல்ல விஷயங்களை இது போன்ற சுவாரசியமான கதைகளில் புகுத்தி நமக்கு ஊட்டிவிடுவதால்தான் இன்னமும் பலர் நல்லவர்களாகவே இருக்கின்றோம். அதுபோலவேதான் பேன்டசியும். அதில் அர்த்தங்களை தேடிக்கொண்டிருப்பதைவிட அனுபவித்தல்தான் சுகம். இதைப் புரிந்துகொள்ள எனக்கும் மிகவும் வருஷங்களாகிவிட்டது. ஒவ்வொரு படத்திலும் அபத்தங்களை தேடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அனுபவித்து பார்க்கும் பழக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டது மிகவும் நல்லதாக முடிந்தது எனக்கு. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் இருந்தாலும் எனக்கென்னவோ இதுதான் பிடித்திருக்கின்றது. இனி விமர்சனத்திற்கு…

கெளதம் மேனன் தன்னுடைய அப்பாவின் நினைவாக இயக்கியிருக்கும் படம்தான் வாரணம் ஆயிரம். ‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்…’ என்கிற ஆண்டாள் பாட்டிலிருந்துதான் படத்தின் தலைப்பு. ஆண்டாள் தனது காதலனாகிய ஸ்ரீமன் நாராயணன் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரை வலம் செய்து வர அவரை ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வாரும் மக்களும் வரவேற்க பூரண கும்பத்துடன் நிற்பதுபோல தான் கண்ட கனவை தோழிக்கு ஆண்டாள் கூறுவது போலிருக்கும் இந்தப் பாடலின் தலைப்பு படத்திற்கு மிகப் பொருத்தம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வருபவர் சூர்யாவின் அப்பா கிருஷ்ணன். சூர்யாவும்தான் என்று படத்தின் இறுதிக்காட்சியில் சிம்ரன் கூறுவார். இரண்டு பேருமே அவரவர் மனைவிக்கு அரங்கனைப் போலிருந்தாலும் படத்தின் கதை மகன் சூர்யாவைச் சுற்றியே வருகின்றது. அப்பா சூர்யா கதையின் பிரதான நாயகனாக இருந்தாலும் அவரையும் மகனின் பார்வையிலிருந்து காட்டுவதின் மூலம் மகன்தான் பிரதான நாயகன் என்று உணர்த்தியிருக்கின்றார் இயக்குநர். இனி கதைக்கு…

வயதான அப்பா கிருஷ்ணனிடமிருந்து ஆரம்பிக்கின்றது கதை. முடி திருத்தம் செய்யப் போன சூர்யா திரும்ப வந்து குளியலறையில் இரத்த வாந்தி எடுக்க டாக்டர்கள் தாம் முன்னமே கூறியபடியான நிலைக்கு வந்துவிட்டதாக கைவிரிக்க தன் மகன் பெயரான சூர்யாவை சொல்லிவிட்டு சிரித்தபடியே உயிர்விடுகின்றார். அதே நேரம் இந்திய இராணுவத்தின் ஒரு முக்கியமான கடமைக்காக ஹெலிகாப்டரில் சக இராணுவ வீரர்களுடன் பயனித்துக்கொண்டிருக்கின்றார் மேஜர் சூர்யா. தொலைபேசியில் தன் தந்தை உயிர்விட்ட சேதியறிந்து மேற்கொண்டிருக்கும் கடமையை முன்னிட்டு பொறுத்துக்கொண்டு இருந்துவிடும் மேஜர் சூர்யா அமைதியாக இருந்தாலும் அவருள் இருக்கும் மகன் சூர்யா தன் அப்பாவைத் தேடி அலைய அவருடைய பார்வையில் விரிகின்றது படத்தின் கதை.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் அரவணைப்பு என்றால் தந்தைதான் கதாநாயகன் என்று ஆரம்பிக்கின்றது கதை. தன்னுடைய அப்பாவும் அம்மாவும் கொண்ட காதலையே தனக்கும் இன்ஸ்பிரேஷனாக ஏற்றுக்கொள்ளும் சூர்யாவின் வாழ்க்கையில் அவருடைய பெற்றோர் வகிக்கும் மாபெரும் பங்குதான் கதை என்றாலும் கதை மகன் சூர்யாவை சுற்றித்தான் சுழலுகின்றது. அப்பா கிருஷ்ணன் அம்மா மாலினியை சந்தித்து காதலித்ததை அம்மா மாலினி சொல்லக் கேட்கின்றார் மகன் சூர்யா. தன் தந்தையை தனது கதாநாயகனாக வைத்திருக்கும் மகன் தன்னுடைய வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திலும் அப்பாவையே உதாரண புருஷராக எடுத்துக்கொள்கின்றார். ஒழுங்காக படிக்காமல் எல்லா மகன்களையும் போல தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை வீணடிக்கும் சூர்யாவுக்கு ஒரு இரயில் பயணத்தின்போது ஏற்படும் சந்திப்பு தன்னுடைய அம்மாவை அப்பா சந்தித்த அந்த காதலான நினைவுகளை கொண்டுவந்து அந்தப் பெண்ணுடன் பார்த்ததும் காதலில் வீழ்கின்றார். ஆனால் இப்படி பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லாமல் அந்தப் பெண் (சமீரா ரெட்டி) தவிர்க்கப் பார்க்கும்போது தன்னுடைய தாயை தன் தந்தை எப்படி முழுதும் அள்ளிக்கொண்டு போனாரோ அதுபோலவே அந்தப் பெண்ணையும் தன்னுடைய காதலால் முழுதும் அள்ளிக்கொண்டு போவேன் என்று உறுதிகொள்ளும் சூா்யா ஒரு வாரம் கழித்து அவளை வீட்டில் சந்திக்கின்றார். இன்னமும் இவர் ஞாபகம் வைத்திருந்ததே ஆச்சரியப்படுத்தினாலும் இன்னமும் முழு நம்பிக்கை வந்துவிடாத சமீரா அமெரிக்காவுக்கான தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கூற வேறு வழியின்றி வீடுதிரும்பும் சூர்யா அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் அதே நேரம் அப்பா மைல்ட் ஹார்ட் அட்டாக்கில் படுத்த படுக்கையாக, காதல் கனவுகள் என்று எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு பொறுப்பான பிள்ளையாக வேலை செய்தும் தன்னுடைய கித்தார் இசைத் திறமையை வைத்தும் சம்பாதித்து அப்பா தொடங்கிய வீட்டை கட்டி கடன்களை அடைத்து நல்ல நிலைக்கு வருகின்றார் மகன் சூர்யா. அதன்பின் அப்பா அம்மாவின் ஆசீர்வாதத்துடன் அமெரிக்காவுக்கு விசா எடுத்து காதலியைத் தேடி விரைகின்றார். அமெரிக்காவில் காதலியை சந்திக்க ஆச்சரியத்தில் அவரின் காதலின் ஆழம் அறிகின்றார் காதலி. பிறகு மெல்ல மெல்ல அவருக்கு இவரின் மேல் காதல் வர அதன்பிறகு எல்லாம் சுபமாக முடியப்போகின்றது என்கிற எதிர்பார்ப்பிலிருக்கும்போது எதிர்பாராவிதமாக நிகழும் ஒரு குண்டு வெடிப்பில் உயிர் துறக்கின்றார் காதலி சமீரா ரெட்டி.

தந்தையைப் போல தன் காதல் வாழ்வும் ஆனந்தத்தில் முடியாத வெறுப்பும் காதலியை இழந்த துக்கமும் சூர்யாவை சுழலடிக்க எல்லாவித தீய பழக்கத்திற்கும் அடிமையாகும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றும் பெற்றோர் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவரையே உணர்ந்துகொள்ள வேண்டி தனியாக காஷ்மீர் அனுப்புகின்றனர். காஷ்மீரில் தன்னை தேடி அலையும் சூர்யா இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலிருந்து காதலி இறந்த சோகத்தில் வந்தபோது விமானத்தில் சந்தித்த அற்புத மனிதர் ஒருவரின் அன்புப் பிள்ளையை யாரோ கடத்திவிட்டதை அறிந்து அவரிருக்கும் டெல்லிக்கு சென்று தன்னுடைய சொந்த முயற்சியால் கஷ்டப்பட்டு அந்த மனிதரின் மகனை மீட்கின்றார். அதன்பிறகு பெற்றோரிடம் திரும்பும் சூர்யா தன்னுடைய சின்னவயதிலிருந்து இருந்த இராணுவ ஆர்வத்தை மையப்படுத்தி இப்போது இராணுவத்தில் சேர விரும்பம் தெரிவிக்க வேறு வழியின்றி மகனின் ஆசைக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் பெற்றோர். அதன்பிறகு இழந்துபோன காதல் எப்படி அவருக்கு தங்கையின் தோழி உருவத்தில் மறுபடியும் கிடைத்தது, அவர் மேற்கொண்ட இராணுவ கடமை என்ன ஆயிற்று என்று விடைசொல்லி முடிக்கின்றது படம்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் பார்ப்பவர்கள் அப்பா சூர்யாவை சுற்றி இருப்பதாக எண்ணிக்கொண்டு மேலும் பார்க்க அது மகன் சூர்யாவை சுற்றி வரும்போது கண்டிப்பாக ஏமாற்றமும் கதை எங்கே போகின்றது என்கிற வெறுப்பும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அது மகன் சூர்யாவை சுற்றி இருப்பதை புரிந்துகொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் கதையும் கோர்வையாக புரிகின்றது. சூர்யாவின் கடின உழைப்பை கண்டிப்பாக நான் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு பிரேமுக்கும் உருவம் மாறும் அவர் காட்சிகளின் தேவைக்கு ஏற்ப தன்னுடைய உடலமைப்பையும் மேனரிசங்களையும் மாற்றிக்கொள்வது அற்புதம். மிகச்சிறந்த கலைஞன் தான் என்பதை சூர்யா மறுபடியும் நிரூபித்திருக்கின்றார். அதிலும் 20 வயது இளைஞனின் தோற்றமும் இராணுவ வீரரின் தோற்றமும் வயதான அப்பா தோற்றமும் அவர் கண்டிப்பாக மிகவும் கஷ்டப்பட்டு செய்திருப்பது தெரிகின்றது. இந்தப் படம் சூர்யாவுக்கு ஒரு மைல்கல். இராணுவ வீரனாக வரும் சூர்யாவின் உடம்பும் கம்பீரமும் நாமும் இராணுவத்தில் சோ்ந்தால் என்ன என்று தோண வைப்பது அருமை.

இளமையாக வரும் சிம்ரன் ஆச்சரியம். அதேசமயம் முதுமையாக வரும் சிம்ரனை ஏனோ அவ்வளவாக இம்சிக்காமல் அப்படியே விட்டிருக்கின்றார்கள். ஒருவேளை சிம்ரன் ஏற்கனவே வயதான தோற்றம் தருகிறார் என்பதாலா என்னவோ தெரியவில்லை. ஆனால் சிம்ரனின் நடிப்பு நிறைவைத் தந்தது. சமீரா ரெட்டியும் நடிக்க முயற்சி செய்திருக்கின்றார் ஆனால் மொழி புரியாததால் என்னவோ அவரால் அவ்வளவு சிறப்பாக நடிக்க இயலவில்லை. ஒருசில காட்சிகளில் மட்டும் அற்புதமாக பொருந்துகின்றார். தங்கையாக வருபவர் ஞாபகத்தில் பதிய மறுக்கின்றார். தங்கையின் தோழியாக வரும் திவ்யா அழகு. அதுவும் அவர் தனது காதலை சொல்லும் இடம் அற்புதமான கவிதை. அதே சமயம் காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது. வருவது கொஞ்சம் நேரம் என்றாலும் நிறைவாக செய்திருக்கின்றார்.

இயக்குனரைப் பொறுத்தவரை கெளதம் மேனனுக்கு இது புதிது. அவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை நானும் எதிர்பார்க்கவேயில்லை. அருமையாக செய்திருக்கின்றார். ஒரு நிறைவான சேரன் படம் பார்த்த திருப்தி நிலவுகின்றது. அப்பா சூர்யா வரும் காலக்கட்டங்களில் பிரேமின் ஒவ்வொரு அங்குலத்தையும் அந்தக் காலக்கட்டங்களுக்கு ஏற்ப வடிவமைத்திருப்பது அருமை. அப்பாவிலிருந்து மகன் சூர்யா வரைக்குமான பல்வேறு காலமாற்றங்களை அற்புதமாக இயக்கியிருக்கின்றார். ஒளிப்பதிவு கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கினாலும் நன்றாக இருக்கின்றது. இசை படத்துடன் இணைந்திருப்பது அழகு. ஹாரிஸ் ஜெயராஜ் சில இடங்களில் வியக்க வைக்கின்றார். இருப்பினும் சில பாடல்கள் திணிக்கப்பட்டதுபோலிருக்கின்றது. பாடல்களை காட்சியாக்கியிருக்கும் விதம் அருமை. அமெரிக்காவையும் காஷ்மீரையும் இதுவரை இந்திய சினிமாக்களில் காண்பிக்காத வண்ணம் அழகாக காண்பித்திருப்பது அருமை. வசனங்கள் சில இடங்களில் மின்னுகின்றது.

கொஞ்சம் மேல்தட்டு வர்க்கம் என்று தோன்ற வைக்கும் அதிக ஆங்கில உச்சரிப்புகள் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் அதை மறக்கடிக்கின்றன. சாதாரணமாக ஒத்துக்கொள்ள முடியாத சில காட்சிகளும் உண்டு. ஆனால் அப்பாவும் மகனும் நண்பர்கள் என்று காண்பிப்பதற்காக இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பீர் அடிப்பது போல் காண்பிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான அறிவுகெட்டத்தனம் இல்லாதது கொஞ்சம் ஆறுதல். காட்சிகள் தொடர்ச்சியாக இல்லாது ஒரு குறை போலிருந்தாலும் அப்பா மற்றும் மகனின் வாழ்க்கயின் பல்வேறு பதிவுகள் என்கிற வகையில் அவை கோர்வையாகத்தான் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் பின்னால் எதனுடனோ தொடர்பு இருக்கின்றது. ஒரு சில அபத்தங்களும் இந்த படத்தை அபத்தத்தை தேடுபவர்களுக்கு பிடிக்காமல் செய்துவிடுகின்றன. எனக்கு என்னவோ இயக்குனர் சில அபத்தங்களை சுவாரசியம் கருதியே வைத்திருப்பது போலிருந்தது இல்லையென்றால் இவ்வளவு நீளப் படத்தை பார்ப்பதும் கடினம்தான். ஒரு உதாரணம் எல்லா தமிழ் படத்திலும் வரும் வகையில் ஒரே பாடலில் கதாநாயகன் சிறப்பான நிலைக்கு வந்து வீடெல்லாம் கட்டி முடிப்பது. ஆனால் அப்படி இல்லையென்றால் ஏற்கனவே நீளமான படத்தில் சூா்யா எப்படி எல்லாம் முன்னுக்கு வந்தார் என்பதை விரிவாகக் காட்டுதல் இன்னமும் நீட்டித்து போரடித்துவிட வைக்கும். ஒரு நாவலைப் படிப்பதுபோல்தான் இந்தப் படமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கீழே வைத்தல் முடியாதது. அதுபோலவே இயல்பான காதலும் காமமும் கூட அசிங்கம் இல்லை என்றுதான் படம் உணர வைக்கின்றது. காமத்தையும் காதலாகத்தான் காட்டப்பட்டிருக்கின்றது. அப்பாவை இத்தனை வயதுக்குப் பிறகும் வா போ என்றும் பெயர் சொல்லியுமே பேசும் அம்மா தமிழ்சினிமாவுக்கு கொஞ்சம் புதியதுதான். அப்பா என்று அழைப்பதை விட டாடி என்றும் மாமா அத்தை என்பதை விட அங்கிள் ஆண்டி என்றும் அழைக்கும் பிள்ளைகளும் மருமகள்களும்கூட கொஞ்சம் நெருடல்கள்தான். இருப்பினும் இதன்மூலம் இயக்குநர் காண்பிக்க விழைவது என்ன என்பது அவ்வளவாக விளக்கப்படவில்லை.

இரசித்த தருணங்கள் மகிழ்ந்த தருணங்கள் அழுத தருணங்கள் எரிச்சல்பட்ட தருணங்கள் என்று இந்த மொத்த படமே எனக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போலத்தான் இருந்தது. இருப்பினும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்க படம் தவறவில்லை. ஒருசில காட்சிகள் திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுத்தன.

சண்டைக் காட்சிகள் இயல்பாக இருந்தது ஆச்சரியம் அதுவும் கெளதம் மேனனின் படத்தில். டெல்லியில் பையனை கடத்திக்கொண்டு போன ரெளடிகளுடன் சூா்யா மோதும் இடம் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு. கிளைமாக்ஸ் இராணுவ சண்டைக் காட்சி அற்புதம். என்ன நடக்குமோ என்று கொஞ்ச நேரம் சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிட்டார். படம் முழுவதுமே கொஞ்சம் சாப்டாக போவது சிலருக்கு சீக்கிரமே தூக்கத்தை வரவழைக்கலாம். ஆனால் எனக்கு அனுபவமாகவே இருந்தது. காதலி இறந்தபின் அப்பா அம்மாவிடம் போனில் அழுது அலறும் மகன் ‘We made love daddy’ என்று அங்கலாய்ப்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதிது. அதுபோலவே காதலியாக ஏற்றுக்கொண்டதாக கூறிய மறுகணமே தங்கையின் தோழியுடன் படுக்கையில் விழும் காட்சிகளும் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் இயல்பான காதலாலான காமத்தைத்தான் அது காட்டுகின்றது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒருவேளை முந்தைய காதலின் வடுக்களுக்கு இது தேவையான வடிகால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளில் ஒரு சிலவற்றையாவது தங்கள் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவம்.

எனக்கு அப்படியே…