ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » குறிப்புகள்

புவி வெப்பத்தைக் குறைப்பதில் நம் பங்கு…
அன்பு நண்பர்களே…

பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது.

தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் அளவை இந்​தியா 40 சத​வீ​தம் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இந்​தியா இழக்க வேண்​டிய தொழில்​வ​ளர்ச்​சி​யும் எதிர்​கொள்ள வேண்​டிய செல​வி​னங்​க​ளும் மிக அதி​கம். இந்​தி​யா​வின் மின்​உற்​பத்​தி​யில் பெரும்​பங்கு அனல்​மின் நிலை​யங்​களி​லி​ருந்​து​தான் கிடைக்​கி​றது. இவற்​றின் மூலம் வெளி​யேற்​றப்​ப​டும் கரியமில வாயுவின் அள​வும் அதி​கம். இதற்​காக அனல்​மின் நிலை​யங்​களை உட​ன​டி​யாக மூடு​வதோ,​ மின்​உற்​பத்​தி​யைக் குறைத்​துக்​கொள்​வதோ இய​லாத காரி​யம்.

இந்​தி​யா​வில் சூரி​ய​சக்தி மூல​மாக மின்​சா​ரம் தயா​ரித்து,​ இழப்பை ஈடு செய்ய முடி​யும் என்​பது உண்​மையே என்​றா​லும்,​ அதற்​கா​கும் செலவு பல ஆயி​ரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகு​தியை ஐக்​கிய நாடு​கள் சபை வழங்​கும் என்​றா​லும்,​ புதிய மின்​உற்​பத்தி முறைக்கு அது முற்​றி​லும் பயன் அளிக்​காது.

தொ​ழில்​து​றை​க​ளில் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயுவின் அள​வைக் குறைப்​ப​தற்​காக,​ தொழிற்​கூ​டங்​க​ளில் புதிய தொழில்நுட்பத்​தைப் புகுத்த வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இத்​தொ​ழில் துறைக்கு மானி​யம் மற்​றும் சலு​கை​கள் அறி​வித்​தாக வேண்டும். இத​னால் இந்​தி​யா​வுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​ப​டும். வளர்ச்​சிப் பணி​கள் தடைப்​ப​டும்.

இந்​தியா அதன் பிரச்​னையை எதிர்​கொள்​ளும் அதே வேளை​யில்,​ இந்​தி​யர் என்ற முறை​யில் நாம் ஒவ்​வொ​ரு​வ​ரும் புவிவெப்பத்தைக் குறைக்க சில வழி​கள் இருக்​கின்​றன. மின்​சா​ரத்தை அள​வா​கப் பயன்​ப​டுத்​து​வது,​ வாக​னப் பயன்​பாட்​டைக் குறைத்துக்​கொள்​வது,​ சீர்​வளி அரங்​கு​கள் மற்​றும் குளிர்​ப​தன பெட்டி பயன்​பாட்டை கட்​டுக்​குள் வைப்​பது போன்​ற​வற்றை மேற்கொள்​ள​லாம். இவை யாவற்​றை​யும் விட மிக அதி​க​மாக ஒரு மனி​தன் இந்​தப் புவிக்கு நன்மை செய்ய விரும்​பி​னால்,​ அவர் சைவ உண​வுக்கு மாறு​வ​தன் மூலம் அதைச் செய்ய முடி​யும்.

அண்​மை​யில் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ், “மாட்​டி​றைச்சி சாப்​பி​டு​வதை நிறுத்​து​வ​தன் மூலம் புவி​வெப்​பத்​தைக் குறைக்​க​லாம்” என்று கூறிய கருத்து உண்​மையே. ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கிய அனைத்து நாடுகளின் பருவ மாறுதல்கள் சபையின் தலைமையாளரும் அச்சபையின் பேரில் அமைதிக்கான நோபல் பரிசை திரு. அல் கோருடன் பெற்றவருமான திரு. இராஜேந்தர் கே. பச்செளரி இதை பல கருத்​த​ரங்​கு​க​ளில் தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றார்.

ஒரு கிலோ மாட்​டி​றைச்​சி​யைத் தவிர்ப்​ப​தன் மூலம் வளி​மண்​ட​லத்​தில் 36.4 கிலோ கரி​ய​மில வாயு கலப்​ப​தைத் தவிர்க்க முடி​யும் என்று அவர் சொல்​வது வெறும் புள்​ளி​வி​வ​ரம் அல்ல. நடை​முறை வாழ்க்​கைக்கு சாத்​தி​ய​மா​ன​தும்​கூட. ஆடு,​ மாடு​கள் வளர்ப்பதற்காக அழி​ப​டும் காடு​கள்,​ இறைச்​சியை வேறு இடங்​க​ளுக்​குக் கொண்டு செல்​வ​தற்​கான வாக​னப் போக்​கு​வ​ரத்து,​ இறைச்சியைக் குளிர்​ப​த​னப் பெட்​டி​யில் வைத்​தி​ருத்​தல் போன்ற தொடர் ​ந​ட​வ​டிக்​கை​களால் ஏற்​ப​டும் கரி​ய​மில வாயுவைக் கணக்கிட்டு இந்​தக் கணக்​கீடு செய்​யப்​ப​டு​கி​றது.

இ​றைச்​சிக் கடை​கள் என்​பது ஊருக்கு ஒரு சில​வாகவும் ஒரு சில நாட்களாகவும் இருந்த காலம் இப்போது முற்​றி​லு​மாக மாறிப்​போய்,​ எல்லா நாள்களிலும் எல்லா இடங்​க​ளி​லும் தெரு​வுக்​குத் தெரு இறைச்​சிக் கடை​க​ளும்,​ பிரி​யா​ணிக் கடை​க​ளும் இருப்பதைக் காண்​கி​றோம். 2006 ம் ஆண்டு உல​கம் முழு​வ​தும் 28 கோடி டன் இறைச்சி உண​வுக்​காக பயன்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. இது ஐம்​பது ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்த அள​வைக் காட்​டி​லும் 5 மடங்கு அதி​கம்.

ஒரு ஹெக்​டேர் நிலப்​ப​ரப்​பில் வேளாண்மை செய்து உரு​வாக்​கப்​ப​டும் காய்​கறி,​ கனி​கள் பருப்​பு​வ​கை​கள் மூலம் ஒரு ஆண்​டுக்கு 30 பேருக்கு உண​வ​ளிக்க முடி​யும். ஆனால் இதே நிலப்​ப​ரப்பை கால்​நடை வளர்ப்​புக்​குப் பயன்​ப​டுத்தி அதன் மூலம் கிடைக்​கும் முட்டை,​ பால்,​ இறைச்சி ஆகி​ய​வற்​றின் மூலம் ஒரு ஆண்​டுக்கு 10 பேருக்கு மட்​டுமே உண​வ​ளிக்க முடி​யும் என்​று கணக்​கி​டப்​ப​டு​கி​றது.

ஒரு கிலோ கிராம் மாட்​டி​றைச்சி பெறு​வ​தற்கு 10 கிலோ கால்​ந​டைத் தீவ​னம் தேவைப்​ப​டு​கி​றது. ஒரு கிலோ பன்​றிக் கறிக்கு 5 கிலோ தானி​ய​மும் ஒரு கிலோ கோழிக்​க​றிக்கு 3 கிலோ தானி​யமும் தேவை​யாக இருக்​கி​றது. ஆனால் இந்த தானி​யத்​தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனி​தன் உண்ண முடி​யும். மேலும்,​ காய்​கறி உண​வைச் சமைக்​கத் தேவைப்​ப​டும் எரி​சக்​தி​யைக் காட்​டி​லும் இறைச்சி உணவு தயா​ரிக்க 25 மடங்கு அதிக எரி​சக்தி தேவை​யாக இருக்​கி​றது. இவை யாவற்​றை​யும் கருத்​தில் கொள்​ளும்​போது,​ ஒரு​வர் சைவ உண​வுக்கு மாறு​வதன் மூலம் மண்​ணு​ல​கிற்கு மட்​டு​மல்ல,​ வளி​மண்​ட​லத்​திற்​கும் நன்மை செய்ய முடி​யும்.

சைவ உணவு மனி​த​ருக்கு எளி​மை​யான உணவு என்​ப​து​டன்,​ வளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளில் கரி​ய​மில வாயு​வை​விட 30 மடங்​கு அதிக தீமை விளை​விக்​கும் மீத்​தேன் வாயுக்கு இறைச்சி கார​ண​மாக இருக்​கி​றது என்​பதை எண்​ணும் போது,​ இந்​தி​யர்​கள் ஒவ்​வொ​ரு​வ​ரும் மாமிச உண​வைத் தவிர்ப்​ப​தும்,​ வச​தி​க​ளைக் குறைத்​துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும். மேலும்,​ புவி வெப்​பத்​தைக் குறைத்து பரு​வ​நிலை மாற்​றங்​களை கட்​டுக்​குள் கொண்​டு​வ​ர​வும் உத​வும். ஒவ்​வொ​ரு​வ​ரும் தங்​க​ளால் இயன்ற அள​வில் வளி​மண்​ட​லத்​தைக் காப்​பது என்று உறு​தியை ஏற்​றுக் கொண்​டால்,​ புவி​யைக் காக்​க​லாம். நாடு அத​ன​ள​வில் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்க முற்​ப​டும்​போது குடி​ம​கன்​க​ளா​கிய நாமும் நம்​மால் முடிந்த பங்​க​ளிப்​பைச் செய்​தால் என்ன?

உங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்…

தமிழ் அமிழ்தம் – இலக்கியங்களின் இணையத் தொகுப்பு…
அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.

ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன்  தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக  செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால்  தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற  அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு தனிப்பட்ட படைப்புகளையும் என்றும்  அழியாவண்ணம் இணையத்திலேயே வைத்திருப்பதுதான். இதன் மூலம் பல அழியா இலக்கியங்கள்  இணையத்தில் என்றும் வாழ்ந்திருக்கும் நம் தமிழ் மொழியின் பெருமையை இன்னும் வரும்  பல்வேறு தலைமுறைகளுக்கும் அளிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த தமிழ் அமிழ்தம் வலைத்தளம் தற்போது எனது சொந்த நிறுவனமான ஈஷா  தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்யப்பட்டு  வந்தாலும், வெகு விரைவில் தமிழ் அமிழ்தத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட அறக்கட்டளையை  உருவாக்கி அறக்கட்டளையில் இணைந்த பெரியோர்களே இந்த வலைத்தளத்தை மேலாண்மை செய்யும்  வகையில் அமைக்க இருக்கின்றேன். இதன் மூலம் எனது நிறுவனம் அழிந்தாலும் தமிழ்  அமிழ்தம் என்றும் அழியாமல் இருக்கும்.

தற்போது கீழ்க்கண்ட வசதிகளை தமிழ் அமிழ்தம் தனது உறுப்பினர்களுக்கு  வழங்குகின்றது:

இலவச உறுப்பினர் கணக்கு

உறுப்பினர் விவரம் (படங்களுடன்)

உறுப்பினர் வலைப்பூக்கள்

பக்கங்கள்

புத்தகங்கள்

இழைகள்

விவாதங்கள்

உறுப்பினர் படங்கள் (புகைப்பட வரிசையுடன்)

மின்தாள்கள் (ePapers)

வினா – விடைகள்

கருத்து ஓட்டுப் பெட்டிகள்

ஆதாரச் சான்றுகள்

உடனடி செய்திச் சேவை (RSS)

இன்னும் பலவித வசதிகள் விரைவில் தமிழ் அமிழ்தத்தில் உறுப்பினர்களுக்கும்  விருந்தினர்களுக்கும் வழங்கப்படும்…

உங்களில் எவரேனும் புதிய வசதிகளை ஏற்படுத்தும்படி யோசனை கொடுத்தாலும் அதை அறிமுகப்படுத்த நான் முயல்வேன். தயவு செய்து உங்களின் மேலான கருத்துக்களை வழங்குவதோடு மட்டுமின்றி இன்றே தமிழ் அமிழ்தத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

உங்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று திறந்த அட்டை (OpenID) முறையையும் இந்த வலைத்தளத்தில் ஏற்படுத்தியிருப்பதால் நீங்கள் ஏற்கனவே இந்த ஓப்பன் ஐடியை உபயோகிப்பவராக இருந்தால் எளிதில் இணைந்துவிடலாம். இல்லையென்றாலும் புதிதாக இணைவது மிகவும் எளிதான விஷயமே.

நீங்களனைவரும் உங்களின் படைப்புகளில் பொது மக்களுக்கு என்னென்ன கொடுக்க விரும்புகின்றீர்களோ அவை அத்தனையையும் தமிழ் அமிழ்தத்தில் வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றே செல்வீர்: தமிழ் அமிழ்தம் – http://www.tamilamirtham.org/

சூரியன் சுற்றுகிறதா இல்லையா?
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="480" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/7dfKoPsA8KQ&hl=en_US&fs=1&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="480" height="385" src="http://www.youtube.com/v/7dfKoPsA8KQ&hl=en_US&fs=1&rel=0&color1=0x3a3a3a&color2=0x999999" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

நண்பர்களே,

எப்படியோ ஆரம்பித்துவிட்ட பூகோள அறிவியல் பற்றிய விவாதத்திற்கு தமிழ் கண்ணீர் இழையில் நான் இட்ட பதில்களில் நிறைய விவாதத்திற்கு சுழியிட்டது இந்த தலைப்பு. இதை நன்கு வலைகளில் ஆராய்ந்தபின் இங்கே தமிழில் வழங்குகின்றேன்.

விளக்கம்:

சூரியன் சுற்றுகிறது என்பது பாதி உண்மை. சுற்றுவதற்கும் தலையாட்டி பொம்மை போல ஒரு புள்ளியில் ஆடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா? ஆக சூரியன் சுற்றுவதில்லை. உண்மையில் அது ஒரு புள்ளியில் தன்னைத்தானே ஆட்டிக்கொள்கிறது என்று கொள்ளலாம். பூமியின் சுழற்சி என்பது முறையான சுழற்சி. அது தன்னைத் தானே வட்டவடிவில் சுற்றிக்கொள்வது மட்டுமில்லாமல் சூரியனையும் நீள்வட்ட வடிவில் சுற்றுகிறது. இந்த சுற்றலில் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் நாமெல்லாம் உயிருடன் இருக்க முடியாது. ஆனால் சூரியனின் சுழற்சி இத்தகையதல்ல. அது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதில்லை. பூமிக்கு தன்னைத்தானே சுற்றுவதற்கு எந்தவித வெளிப்புற விசையும் தேவையில்லை. ஆனால் சூரியன் தன்னைத்தானே  சுற்றிக்கொள்வதற்கு வெளிப்புற விசை தேவைப்படுகின்றது. இது கயிற்றால் சுற்றப்பட்டு வேகமாக எறிந்ததால் சுற்றும் பம்பரம் போன்ற சுழற்சி. முறையானதோ ஒழுங்கானதோ அல்ல. அதுமட்டுமின்றி சூரியன் தன்னைத்தானே சுற்றுவது தவிர வேறு எதையும் பூமிபோல வலம் வருவது இல்லை. சிலபேர் அண்டவெளியில் சூரியக்குடும்பங்கள் நகருவதாக கூறுவது நகர்தலே தவிர சுழற்சி அல்ல. சுழற்சி என்பது ஒரு ஒழுங்கான வட்டமோ அல்லது நீள்வடிவமோ ஏற்படும்போதுதானே தவிர வேறு வகை அல்ல.

சூரியன் சுற்றுவதற்கு வெளிப்புற விசை வேண்டுமென்று கூறினேன் அல்லவா? அது என்னவெனில், சூரியனைத் தொட்டு அல்லது சூரியனுக்கு மிகவும் அருகில் வேறு கிரகங்களையோ அல்லது பால்வீதிகளையோ தேடிப் போகும் பல்வேறு சிறுசிறு கற்களும் கோளங்களும் அதனுடைய ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு சூரியனுடன் மோதும்போது சூரியனின் மேற்பகுதியில் ஏற்படும் ஒருவித விசை சூரியனை நிதானமாக ஒரு முறை தன் அச்சிலிருந்து மாறாமல் சுழற்றிவிடுகின்றன. இந்த சுழற்சியை விளக்கும் நாசாவின் ஒளிப்பதிவை (நீண்ட காலமாக காத்திருந்து காத்திருந்து எடுக்கப்பட்டது) கீழேயுள்ள இணைப்பில் காணுங்கள்:

http://www.youtube.com/watch?v=7dfKoPsA8KQ

தன்னைத்தானே சுற்றுவது மட்டும்தான் ஈர்ப்பு விசை படலத்தை உருவாக்க முடியும் என்பதும் தவறு. ஈர்ப்பு விசை என்பது ஒரு கோளத்தில் மேல்படலத்தின்மேல் மாஸ் எனப்படும் உருவம் இல்லாத வெற்றிடத்துகள்கள் படரும்போது உருவாகுவது. இது புவியீர்ப்பு விசைக்கும் பொருந்தும். இதை விளக்க ஒரு சிறிய எடுத்துக்காட்டு: உங்களிடம் ஒரு கோள வடிவப் பாறை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை சூரியனின் ஈர்ப்பு வட்டப்பாதைக்குள் சிக்காத விண்வெளியில் எறிந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது எந்தவிதமான அசைவும் இன்றி அப்படியே நிற்கும். ஏனெனில், அண்டவெளியில் விசை என்பது இல்லை. அது வெறும் வெற்று வெளி மட்டுமே. இப்படி அசையாமலிருக்கும் உங்களின் கோள வடிவ பாறைக்கு மிக அருகில் ஒரு வேகமான எரிகல்லோ அல்லது எரிநட்சத்திரமோ செல்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த எரிகல் அல்லது எரிநட்சத்திரத்தின் நெருங்கும் கோணம், நெருங்கும் வேகம் மற்றும் உங்கள் பாறையிலிருக்கும் உருவமில்லாத வெற்றிடத்துகள்களின் அளவையும் பொறுத்து உங்கள் பாறையின் ஈர்ப்பு விசையில் மாட்டிக்கொண்டு வேகமாக அதை மோதிவிடும்.  பொதுவாக அண்டவெளியில் எந்தவிதமான எதிர்ப்புத்தண்மையும் இருப்பதில்லை ஏனெனில் எந்தவொரு கோளமும் கம்பத்தின் மேல் சுழலுவதில்லை, வெற்றிடத்தில்தான் சுழலுகின்றன. இவ்வாறு எதிர்ப்புத்தன்மையில்லாத உங்களின் பாறையின் மேல் எரிநட்சத்திரம் வேகமாக மோதியதால் ஒருவித விசையை உருவாக்கும். இந்த விசை உங்கள் பாறைக்கு ஒரு சிறிய சுழற்சியைக் கொடுக்கும். அந்த எரிகல்லோ அல்லது எரிநட்சத்திரமோ உங்களின் பாறையின்மேல் மோதாவிட்டாலும் மிக அருகில் வேகமாக வந்ததாலேயே உருவாகும் ஒருவித ஈர்ப்பு விசை ஒரு சிறிய அளவான சுழற்சியை ஏற்படுத்தும் (நீங்கள் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து உங்களுக்கு மிக அருகில் வேகமாக கடந்துபோனால் நிலைதடுமாறுவீர்கள் அல்லவா அதுபோன்ற விசைதான் இதுவும்). இந்த சிறிய அளவு கணக்கிட முடியாதது, பல ஆயிரம் வருடங்களில் இந்த நிகழ்வு திரும்பத் திருப்ம நிகழ்ந்தால் அதனால் உருவாகும் விசையின் மொத்த வலிமைக்கு உங்களின் பாறையை சுழலச்செய்யும் வலிமை உண்டு. ஆகவே இவ்வாறு உருவாகிற சுழற்சிதான் சூரியனின் சுழற்சி.

எல்லா வெற்றிடப்புள்ளிகளும் (Mass) ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கின்றன. ஆதலினால் இத்தகைய ஈர்ப்பு படலங்களைப் பெற்ற பொருள்கள் தங்களைச் சுற்றி நெருக்க மாக உள்ள அல்லது நெருங்கி வருகின்ற பொருட்களை பாதிக்கின்றன. ஆகமொத்தத்தில் அனைத்து பொருட்களுமே ஏதோவொரு சுழற்சியை உள்ளடக்கியே இருக்கின்றன.

பெரிய அளவில் கூறுவதானால், சூரியன் சுழற்சியைக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல் மேலும் கீழும் அகமும் புறமுமாக நட்சத்திரக் குடும்பத்தில் சூரியன் நகர்ந்துகொண்டும் இருக்கின்றது. இதனால், இது போன்ற மற்ற நட்சத்திரக் குடும்பங்களும் நமது சூரியன் உள்ள நட்சத்திரக் குடும்பமும் மெல்ல மெல்ல அண்டவெளியின் கருமையத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு இழையில் நமது சூரியக்குடும்பத்திலுள்ள அனைத்து கிரகங்களின் சுழற்சி பற்றி இன்னமும் தெளிவாக விளக்குகின்றேன்.

நன்றி…

தமிழ் வளர யாது செய்ய வேண்டும்
நாளைக்கு தமிழ் என்ன ஆகப்போகிறது என்று யோசிக்கும் முன்னர் தற்போது தமிழ் எப்படியிருக்கின்றது என்று கொஞ்சம் யோசிப்போமா? தமிழ்த்தாயின் பயோடேட்டா முத்தமிழ்க்குழுமத்திலேயே ஒரு இழையில் கொடுத்திருந்தார்கள் அதில் சொல்லப்பட்டிருந்தவை ஆணித்தரமான நிஜம். தமிழ் இப்போது செம்மொழி அந்தஸ்த்து அடைந்திருக்கின்றது. செம்மொழி என்றால் என்னவென்று என்னைக் கேட்காதீர்கள் கண்டிப்பாக ஒரு தமிழறிஞர் பதிலளிக்க வேண்டிய பாமரனுக்குப் புரியாத கேள்வி அது. ஆனால் செம்மொழி அந்தஸ்த்து என்பது தமிழுக்கு எந்தவிதத்திலும் உபயோகப்படாது. தமிழ் மொழியை தமிழர்களே கெடுத்தும் பேசாமல் மறைத்தும் வாழும் கேவலமான நிலையில் நமது தாய்நாடும் தாய் மொழியும் இருக்கின்றது. இன்று தூய தமிழ் பேசும் (இதுவும் என்ன என்று உடனே கேட்டுவிடாதீர்கள்) தமிழர்கள் மிகவும் குறைவு. தமிழ் என்பது மிகவும் மரியாதை தவழும் பண்பாடு வளர்த்த மொழி. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் தமிழ் பாடாய்படுகிறது என்று பார்த்தால் தமிழ் பண்பாடுள்ள மொழியா என்று ஒரு கேள்வி கேட்கத் தோன்றும்.

இருப்பினும் என் கருத்தில் உலகத்திலேயே பண்பாடும் மரியாதையும் வளமும் செழுமையும் எழுத்து அழகும் பேச்சு இனிமையும் வாய்ந்த ஒரே மொழி தமிழ் மொழிதான் என்பேன்.

இப்போது உங்களின் கேள்விக்கு வருகின்றேன். நாளைக்குத் தமிழ் என்ன ஆகப்போகின்றது? கண்டிப்பாக தமிழ் மொழி சிறுபாண்மை மொழியாக மாறிவிடும் இன்று இருக்கும் படி இருந்தால். இப்போது ஆங்கிலத்தின் போக்கு இந்தியா முழுவதும் விளங்கிவருவதை நன்றாக காணலாம். தமிழறிந்த தமிழர் கூட ஆங்கிலத்தில் பேசுவதையும் வீட்டில் குழந்தையுடன் ஆங்கிலத்தில் கொஞ்சிக் குலாவுவதையும் (அது பட்லர் இங்கலீஷ் என்ற சொல்லப்படும் மோசமான ஆங்கில உச்சரிப்பாக இருந்தாலும்) மிக அதிகமாக காணலாம். இது நாளை வளரும் சமுதாயத்திற்கு தமிழ் தேவையில்லை என்றொரு சூழ்நிலையை உருவாக்கும். தமிழ் மட்டும் படித்தவருக்கு இன்று என்ன நிலை என்பதை சமீபத்தில் தமிழ்நாட்டில் வந்த கற்றது தமிழ் (தமிழ் M.A) திரைப்படத்தைவிட சிறப்பாக யாராலும் காண்பிக்க முடியாது. கிடைத்தால் இப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். கனிணி அறிவியலால் நம் தாய் மொழி படும் அவலங்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

இருப்பினும் இது முழுக்க உண்மையல்ல. ஆங்கிலேய வர்த்தக நிறுவணங்கள்கூட தமிழின் பெருமையை அறிந்திருக்கின்றன (அல்லது தமிழரை அதிகமாக வேலைக்கு வைத்திருக்கின்றன) அதனால்தான் யூனிகோடில் சிறந்த இடம் தமிழுக்கு கிடைத்தது மட்டுமல்லாது பல மென்பொருட்கள் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பையும் கொண்டுள்ளதுதான். இன்று இணைத்திலும் தமிழ் வலைத்தளங்களும், வலைப் பதிவுகளும், வலைப் பூக்களும், தமிழ் விக்கிஷனரி போன்ற அகராதிகளும் இது போன்ற குழுமங்களும் பரவி விரிந்து கிடக்கின்றன. இது சரியான முன்னேற்றம்தான். ஆனால் இது மட்டும் போதும் என்ற நாம் அளவளாவி இருந்துவிடக்கூடாது. அப்படி இருந்தோம் என்றால் நம் தலைமுறையினரே தமிழை ஒதுக்கும் அவல நிலை ஏற்பட்டுவிடும். இன்று தமிழ் சரியாக எழுதப் படிக்க தெரியாத எவ்வளவே தமிழ் குழந்தைகள் இருக்கின்றனர். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் அவலநிலையும் நீடிக்கிறது. இது இப்படியே தொடருதல் மிகவும் தவறு.

இப்போது உங்களின் அடுத்த கேள்விக்கு வருகின்றேன். இவ்வாறு தமிழ் சீரழிந்துவிடாமல் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? கீழே உள்ளவற்றை பாருங்கள். இது மட்டுமின்று வேறுபல முறைகள் இருப்பினும் அவற்றை தமிழறிஞர்கள் பதிலுக்கு விட்டுவிடுகின்றேன்:

தமிழ் பேசிப் பழக வேண்டும். முடிந்தால் தூய தமிழை அகராதி வைத்தாவது கற்றுக்கொண்டு பேசிப் பழகலாம்.

தமிழ் நூல்களை மிகவும் படிக்க வேண்டும். தமிழில் மட்டும் இலக்கியங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொன்றும் ஒரு சுவை என பல்வேறு சுவைகளில் இலக்கியங்கள் பரவிகிடக்கும் மொழி அது.

வீட்டில் தமிழில் பேசிப் பழக வேண்டும். பிள்ளைகளுக்கு தூய தமிழைக் கற்றுத்தர வேண்டும். கொஞ்சம் படிக்கக்கூடிய வயதுள்ள பிள்ளையெனில் அதற்கு முத்தமிழ்ப் பாலை ஊட்ட வேண்டும்.

தமிழில் இணையத்தளங்கள் அளிப்பது மட்டும் போதாது. தமிழின் அருமை பெருமைகளை உணர்த்தும் வண்ணம் தமிழ் அமிழ்தத்தைப் தெவிட்ட தெவிட்ட பருகக் கொடுக்க வேண்டும். எனக்கு தமிழ் மொழி மிகவும் இனிமையானது என்பதில் அணுவளவும் சந்தேகம் இல்லை. அதை நாம் கொடுத்து மற்றவர் உணர்ந்துவிட்டால் அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு அவர்களே அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவர்.

ஆங்கிலம் வழி (மற்றும் பல மொழிகளின் வழி) தமிழ் கற்றுக்கொள்ள வலைத்தளங்கள் அமைக்க வேண்டும். வெறும் அகராதியை வைத்து கற்றுக்கொள் என்பது பொருந்தாது. இலவச தமிழ்ப பாடங்கள் வழங்கும் வலைத்தளங்கள் வேண்டும். அவற்றில் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகளும் இருத்தல் வேண்டும்.

தமிழுக்கு முறையான மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைத்தல் வேண்டும். தமிழுக்கு முறையான அகராதியை அமைத்தல் வேண்டும். இப்போது இருக்கும் இணையத் தமிழகராதிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

தமிழ் நாட்டிலேயே கல்வி அறிவை வளர்த்தல் வேண்டும். அதில் ஆங்கில வழிக் கல்வி முறையின் சிறப்பைக் குறைத்தல் வேண்டும். தாய் மொழி வழிக் கல்வியின் சிறப்பைக் கூட்டல் வேண்டும். பிள்ளைகளின் பிஞ்சுத்தமிழால் கல்விநிலையங்கள் நிறைத்தல் வேண்டும்.

தமிழ் நூல்கள் இலவசமாக இணைத்தில் கிடைத்தல் வேண்டும். அவற்றின் உரையாடல் ஒலிக்கோப்புகள் தேமதுரத் தமிழேசையில் இருத்தல் வேண்டும். கவிதைகளும் பாடல்களும் அவற்றின் சிறப்பை அலங்கரித்தல் வேண்டும்.

தமிழிலேயே முழுவதும் இயங்கக்கூடிய இயங்குதளங்கள் வேண்டும். அவற்றில் தமிழ் மென்பொருட்கள் வேண்டும். தமிழிலேயே அமைந்துள்ள இணைய உலாவி வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் தமிழை புகுத்தல் வேண்டும். தமிழ் எண்களையும் மதித்தல் வேண்டும். தமிழ் மாதங்களை காணல் வேண்டும். தமிழில் அறிவிப்புப் பலகைகள் இருத்தல் வேண்டும். தமிழின் உபயோகம் தமிழகம் எங்கும் திகழல் வேண்டும்.

இன்னும் எத்தனையோ வேண்டும்களை என்னால் கூற முடியும். சுருக்கமாகச் சொன்னால் மகாகவி பாரதிபோல், “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் கேட்கும் வழி செய்தல் வேண்டும்”

தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேவை!
உங்களனைவருக்கும் நான் இன்னொரு அற்புதமான தமிழ் வலைத்தளம் விக்கிபீடியா முறையில் வைத்துள்ளது தெரியும் என்று நினைக்கின்றேன். தெரியாதவர்கள் தயவு செய்து தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தை சென்று காணுங்கள்.

இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் அற்புத மொழியான தமிழை இழக்க விரும்பாத என்னைப் போன்ற தமிழ் மொழிப்பிரியர்கள் அணைவரும் இந்த வலைத்தளத்தை உபயோகிக்கலாம். இது அணைவரும் மாற்றங்களை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் (சில முக்கிய பக்கங்கள் தவிர்த்து) யார் வேண்டுமானாலும் மாற்றலாம். ஒரே தேவை நீங்கள் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்பது மட்டுமே.

நீங்கள் ஒரு எழுத்தாளராகவோ அல்லது கவிஞராகவோ இருப்பின் தயவு செய்து உங்களின் படைப்புகளில் எதையெல்லாம் தமிழுக்கு இலவசமாக அற்பணிக்க விரும்புகின்றீர்களோ அவற்றையெல்லாம் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றுங்கள். தமிழில் எப்படி பதிவேற்றுவது, இந்த வலைத்தளத்தை எப்படி உபயோகப்படுத்துவது போன்ற கேள்விகளுக்கு உதவி பக்கங்களைப் பாருங்கள்.

இவர்களல்லாமல், ஓய்வுபெற்ற அல்லது பணியிலுள்ள (ஓய்வு நேரம் ஒதுக்கக்கூடிய) தமிழ் பேராசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! நீங்கள் தமிழின் சில அற்புத நூல்களையும், உங்களின் படைப்புகளையும், கவிதைகளையும், கதைகளையும் இன்னும் வேறு பல ஆவணங்களையும் தமிழ் அமிழ்தத்தில் வழங்கலாம். நீங்கள் இதை இலவசமாகவும் செய்து தமிழுக்கு தொண்டாற்றலாம். அல்லது, சிறிய தொகைக்கும் நீங்கள் இந்த வேலையை செய்யலாம். உங்களுடைய தொகை மாதம் உங்களுக்கு ஈஷா தொழில்நுட்பங்கள் நிறுவணத்தாரால் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு என்னுடைய அலுவலக மின்னஞ்சலில் (paul AT ishatechnologies DOT in) தொடர்புகொள்ளுங்கள்.

வாருங்கள் ஒரு இனிய தமிழ் சமுதாயம் அமைப்போம்… நம் சந்ததியினருக்கு நம்மாலான தொண்டை இன்றே செய்வோம்…

கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?
அறிமுகம்

தமிழை கணினியில் உபயோகப்படுத்துவதற்கு யூனிகோட் முறை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சில எழுத்துருக்களை (Fonts) வைத்துக்கூட தமிழில் எழுதலாம் ஆனால் அவை கோப்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். வலைத்தளங்களிலும் மென்பொருட்களிலும் நாம் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி தமிழில் எழுதுவது கடினம். ஏனெனில் வலைத்தளங்களாயிருப்பின் எழுத்துருவை இறக்குமதி செய்தால்தான் தமிழில் தெரியும். மென்பொருட்களாயிருப்பின் சில மென்பொருட்கள்தான் எழுத்துருக்களை மாற்ற அனுமதிக்கும். இதையெல்லாம் சரிசெய்யப் பிறந்ததே யூனிகோட் (யூனிகோடு என்றால் என்ன என்பதை அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்)

இந்த யூனிகோட் என்பது நிறைய மொழிகளை அனுமதிக்கும் ஒரு எழுத்துக்குறியீடு முறை. இதை உபயோகப் படுத்த உங்களிடம் நவீன இயங்குதளங்கள் இருக்க வேண்டும். வின்டோஸ் எக்ஸ்பியிலிருந்து வந்த அணைத்து மைக்ரோசாப்ட் இயங்குதளங்கள், லினக்ஸ் இயங்குதளங்கள், மேக் ஓஎஸ் எக்ஸ் இயங்குதளங்கள் ஆகியவை யூனிகோடை அனுமதிக்கின்றன.

தமிழ் எழுத்து முறை தெரிந்தவர்கள்

தமிழ் எழுத்து முறை விளக்கப் படம்:

பொதுவாக யூனிகோடில் நேரடியாக எழுதுவது கடினம். ஏனெனில் அது எண்களடங்கிய தொகுப்பு. எழுத்து முறைக்கு ஏதாவது செயலாக்கி வேண்டும். அப்படி ஒரு செயலாக்கி ஈ-கலப்பை. இதை உங்கள் கணினியில் பதிந்தால் ஒரு குட்டி ஐகான் உங்களது சிஸ்டம் ட்ரேயில் தெரியும் இதை சொடுக்கிப் பார்த்தாலே எந்த மொழிகளில் நீங்கள் எழுதலாம் என்று தெரியும். இதில் தமிழுக்கு ஒரு ஷார்ட் கட் கொடுத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி எந்த மென்பொருள் அல்லது வலைத்தளம் யூனிகோடை ஏற்றுக்கொள்கிறதோ அங்கே உபயோகிக்கலாம்.

தமிழ் எழுத்து முறை தெரியாதவர்கள்

மேலே குறிப்பிட்ட ஈ-கலப்பையின் இன்னொரு அவதாரம் அஞ்சல் எழுத்துரு முறை. இந்த முறையின் மூலம் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் அதைத் தமிழில் காணலாம். உதாரணத்திற்கு ammaa என்பது அம்மா என்று வரும். இதுவும் ஈ-கலப்பையின் இன்னொரு பதிப்பில் இருக்கின்றது.