பொதுவானவை தலைப்பிலுள்ள பதிவுகள்

புவி வெப்பத்தைக் குறைப்பதில் நம் பங்கு...

புவி வெப்பத்தைக் குறைப்பதில் நம் பங்கு…

அன்பு நண்பர்களே… பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது. தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் [...]

2 கருத்துகள்

தமிழன்.in - உலகத் தமிழர்களின் உலகம்...

தமிழன்.in – உலகத் தமிழர்களின் உலகம்…

அன்பு நண்பர்களே, என்னுடைய தமிழமுதம் முயற்சிக்குப் பிறகு உலகத் தமிழர்களை இணைக்கவென்று ஒரு சமுதாய வலைக்கூடம் (Social Networking) அமைக்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். இன்று அந்த முயற்சிக்கு உருவகம் கொடுத்துள்ளேன் என்பதை உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன். வெறும் சமுதாய வலைக்கூடமாக மட்டும் இல்லாமல் உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட வலைப்பூக்களை அவர்களுடைய விருப்பப் பெயருடன் அமைந்த துணை டொமைனை (Sub Domains) வைத்து உருவாக்கும்படி அமைத்துள்ளேன். இதன் மூலம் இனி உங்களுக்கு ஒரு வலைப்பூ வேண்டுமெனில் எந்த விதமான செலவும் [...]

2 கருத்துகள்

தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!

தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!

அன்பு நண்பர்களே, மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். [...]

கருத்துகள் இல்லை

கோவை பதிவர் சந்திப்பு - ஓரு நேரடிப் பார்வை...

கோவை பதிவர் சந்திப்பு – ஓரு நேரடிப் பார்வை…

கோவை சந்திப்பு வருகிற 13ம் தேதி நிகழ இருக்கின்றது என்று மஞ்சூரண்ணன் சொன்னதிலிருந்தே முதன்முறையாக இத்தகைய சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அடக்கமுடியாமலிருந்தது. கோவையில் மூன்று வருடங்கள் வேலை செய்ததில் எனக்கு கிடைத்திருந்த நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியதென்பதால் தங்குவதைப் பற்றி கவலைப்படாமல் புகைவண்டிக்கு டிக்கெட்டும் எடுத்துவிட்டபின்தான் யோசித்தேன். எங்கே நடக்கிறது கோவையில்???? இருக்கிற எல்லா மின்னஞ்சல்களையும் அலசி ஆராய்ந்ததில் சென்னை சந்திப்பு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டு கோவை சந்திப்புக்கான இடம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவசர அவசரமாக [...]

11 கருத்துகள்

தமிழ் வளர யாது செய்ய வேண்டும்

தமிழ் வளர யாது செய்ய வேண்டும்

நாளைக்கு தமிழ் என்ன ஆகப்போகிறது என்று யோசிக்கும் முன்னர் தற்போது தமிழ் எப்படியிருக்கின்றது என்று கொஞ்சம் யோசிப்போமா? தமிழ்த்தாயின் பயோடேட்டா முத்தமிழ்க்குழுமத்திலேயே ஒரு இழையில் கொடுத்திருந்தார்கள் அதில் சொல்லப்பட்டிருந்தவை ஆணித்தரமான நிஜம். தமிழ் இப்போது செம்மொழி அந்தஸ்த்து அடைந்திருக்கின்றது. செம்மொழி என்றால் என்னவென்று என்னைக் கேட்காதீர்கள் கண்டிப்பாக ஒரு தமிழறிஞர் பதிலளிக்க வேண்டிய பாமரனுக்குப் புரியாத கேள்வி அது. ஆனால் செம்மொழி அந்தஸ்த்து என்பது தமிழுக்கு எந்தவிதத்திலும் உபயோகப்படாது. தமிழ் மொழியை தமிழர்களே கெடுத்தும் பேசாமல் மறைத்தும் [...]

கருத்துகள் இல்லை

தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேவை!

உங்களனைவருக்கும் நான் இன்னொரு அற்புதமான தமிழ் வலைத்தளம் விக்கிபீடியா முறையில் வைத்துள்ளது தெரியும் என்று நினைக்கின்றேன். தெரியாதவர்கள் தயவு செய்து தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தை சென்று காணுங்கள். இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் அற்புத மொழியான தமிழை இழக்க விரும்பாத என்னைப் போன்ற தமிழ் மொழிப்பிரியர்கள் அணைவரும் இந்த வலைத்தளத்தை உபயோகிக்கலாம். இது அணைவரும் மாற்றங்களை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் [...]

கருத்துகள் இல்லை

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

என் இனிய தோழர் தோழியரே, உங்களனைவருக்கும் எனது உள்ளங் கணிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தென்னாடுடைய ஈசன் உங்களனைவரையும் காப்பாற்றி அருளுவானாக! இந்த இனிய தமிழ் புத்தாண்டில் நான் சில யோசனைகளை செய்கின்றேன். தவறாயிருப்பின் தயவு செய்து மன்னித்து மறந்துவிடுங்கள்: நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் வருடங்கள் தெரியும்? நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்கள் தெரியும்? நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எண்கள் தெரியும்? இதற்கு பதில் கண்டிப்பாக நிறைய பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. [...]

கருத்துகள் இல்லை

நல்வரவு!

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வரவு!!! உங்களனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! இந்த புத்தாண்டு உங்களுக்கு இனிமையையும், பல நலன்களையும், சந்தோஷத்தையும், அமைதியையும், வெற்றிகளையும், படிப்பினைகளையும், மற்றும் பல அனுபவங்களையும் வழங்க எல்லாம் வல்ல, எம்பெருமான், தென்னாடுடைய சிவனை வேண்டுகின்றேன். இந்த புத்தாண்டில் நான் செய்ய நினைத்த முக்கிய செயல் தமிழில் ஒரு வலைப்பதிவை எழுதுவதுதான். ஏற்கனவே எனது ஆங்கில வலைக்குறிப்பில் சில தமிழ் பக்கங்களை நான் அமைத்திருந்தாலும் (அவற்றையெல்லாம் இங்கே விரைவில் கொண்டு வந்துவிடுகின்றேன்) தமிழுக்கென்று [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme