வாழ்த்துக்கள் குறிச்சொல்லிட்ட பதிவுகள்

ஆஸ்கார் விருதை வென்ற முதல் தமிழர், ஏ. ஆர். ரஹ்மான்

ஆஸ்கார் விருதை வென்ற முதல் தமிழர், ஏ. ஆர். ரஹ்மான்

தமிழ்நாட்டின் இசைப் புயல் இன்று வெளிநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளர் (இளையராஜாவிற்கு அடுத்த) ஏ. ஆர். ரஹ்மான் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மூல பாடல் (Original Song) மற்றும் மூல பாடல் இசை (Original Score) ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை குடிசையிலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற படத்திற்காக வழங்கியிருக்கின்றார்கள். இந்தப் படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை இதுவரை வென்றிருக்கின்றது. இந்தப் படம் [...]

கருத்துகள் இல்லை

இனிய 2009 குடியரசுதின வாழ்த்துக்கள் இந்தியா!!!
இனிய புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள்!
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்பு நண்பர்களே, நண்பிகளே, உங்களனைவருக்கும் எனது இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – [...]

கருத்துகள் இல்லை

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

என் இனிய தோழர் தோழியரே, உங்களனைவருக்கும் எனது உள்ளங் கணிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தென்னாடுடைய ஈசன் உங்களனைவரையும் காப்பாற்றி அருளுவானாக! இந்த இனிய தமிழ் புத்தாண்டில் நான் சில யோசனைகளை செய்கின்றேன். தவறாயிருப்பின் தயவு செய்து மன்னித்து மறந்துவிடுங்கள்: நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் வருடங்கள் தெரியும்? நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்கள் தெரியும்? நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எண்கள் தெரியும்? இதற்கு பதில் கண்டிப்பாக நிறைய பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. [...]

கருத்துகள் இல்லை

திருவாசக வாழ்த்து!

இந்தக் கவிதைகள் பக்கத்தை எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானுக்கான போற்றியாக ஆரம்பிக்கின்றேன். (அட, என்னுடைய கவிதைகள் தான் இங்கே இருக்கும் என்று நினைத்தீர்களா? மற்ற எனக்குப் பிடித்தவர்களின் கவிதையும் இருக்கும். ஆனால் யாருடையது அது எனும் குறிப்பும் இருக்கும்). இங்கே திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள்! நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க [...]

கருத்துகள் இல்லை

நல்வரவு!

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வரவு!!! உங்களனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! இந்த புத்தாண்டு உங்களுக்கு இனிமையையும், பல நலன்களையும், சந்தோஷத்தையும், அமைதியையும், வெற்றிகளையும், படிப்பினைகளையும், மற்றும் பல அனுபவங்களையும் வழங்க எல்லாம் வல்ல, எம்பெருமான், தென்னாடுடைய சிவனை வேண்டுகின்றேன். இந்த புத்தாண்டில் நான் செய்ய நினைத்த முக்கிய செயல் தமிழில் ஒரு வலைப்பதிவை எழுதுவதுதான். ஏற்கனவே எனது ஆங்கில வலைக்குறிப்பில் சில தமிழ் பக்கங்களை நான் அமைத்திருந்தாலும் (அவற்றையெல்லாம் இங்கே விரைவில் கொண்டு வந்துவிடுகின்றேன்) தமிழுக்கென்று [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme