ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » வேடிக்கைகள்

ஏன் ஆண் பிள்ளைகள் சந்தோஷமானவர்கள்?
1. உங்களின் கடைசிப் பெயர் மாறுவதில்லை

2. கேரேஜ் முழுவதும் உங்களுடையதே (கார் வைக்கும் இடம்)

3. கல்யாண திட்டங்கள் அவற்றாலேயே தீர்த்துவைக்கப்படும்

4. சாக்லேட் என்பது மற்றுமொரு தீனி அவ்வளவே

5. நீங்கள் எப்போதுமே கர்ப்பம் தரிக்க முடியாது

6. கார் மெக்கானிக்குகள் உங்களிடம் உண்மையை பேசுவார்கள்

7. உலகமே உங்களின் சிறுநீரால் வழங்குகின்றது

8. நீங்கள் எப்போதுமே கழிவறை சரியில்லாததால் இன்னொரு பெட்ரோல் நிலையத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை

9. நீங்கள் எப்போதுமே ஒரு நட்டையோ அல்லது போல்டையோ மாற்றும்போது நிறுத்திவிட்டு எந்தப்பக்கம் திருப்புவது என்று யோசிக்கத்தேவையில்லை

10. அதே வேலை, அதிக சம்பளம்

11. சுருக்கங்கள் உங்களின் தோற்றத்தின் கம்பீரத்தை கூட்டுபவை

12. நீங்கள் பேசும்போது எவரும் உங்களுடைய மார்பை பார்க்க மாட்டார்கள்

13. புது காலணிகள் உங்கள் கால்களை கடிப்பதில்லை

14. எப்போதுமே ஒரேமாதிரியான மூடிலிருப்பீர்கள்

15. போன் பேச்சுக்கள் 30 வினாடிகளில் முடிந்துவிடும்

16. உங்களுக்கு டேங்க்குகள் மற்றும் இயந்திரங்கள் பற்றி தெரியும்

17. ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரேயொரு சூட்கேஸ் போதும்

18. உங்களுடைய ஜாடிகளை உங்களுக்கு திறக்கத் தெரியும்

19. கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்தாலே உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்

20. உங்களின் உள்ளாடைகள் மூன்றுக்கு ரூபாய் 30 போதும்

21. மூன்று ஜோடி காலணிகள் உங்களுக்கு மிகவும் போதுமானது

22. உங்களின் உடைகளிலுள்ள சுருக்கங்களை உங்களுக்குப் பார்க்கத் தெரியாது

23. உங்களின் முகத்திலிருக்கும் அணைத்தும் அந்தந்தக் நிறத்திலேயே இருக்கும்

24. ஒரேமாதிரியான தலைமுடி அமைப்பு உங்களுக்கு பல வருடங்களுக்குத் தாங்கும்

25. உங்களின் தாடையையும் கழுத்தையும் மட்டும் மழித்தால் போதும்

26. ஒரேயொரு பர்ஸ், ஒரேயொரு ஜோடி காலணி, ஒரேயொரு நிற உடை உங்களுக்கு எல்லா சீசனுக்கும் தாங்கும்

27. உங்களின் கால்கள் எப்படியிருந்தாலும் உங்களால் ஷார்ட்ஸ் அணிய முடியும்

28. உங்களின் நகங்களை சின்ன பாக்கெட் சைஸ் நகவெட்டியால் வெட்டி ஒழுங்குபடுத்திவிட முடியும்

29. முகத்தில் மீசை மற்றும் தாடி வைப்பதைப் பற்றி முடிவெடுக்கும் முழு சுதந்திரம் உங்களுக்கு உண்டு

30. நீங்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கை டிசம்பர் 24ம் தேதிகூட 25 உறவினர்களுக்கு வெறும் 30 நிமிஷத்தில் முடிக்க முடியும்

கடவுள் இருக்கிறாரா இல்லையா?
அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்

கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

(முடிந்தது…)

பாட்டி நீதிமன்றத்திற்கு போனால்?
உண்மையில் நடந்த நீதிமன்ற விவகாரம்:

அமெரிக்காவிலுள்ள மிஸிஸிப்பி மாநிலத்திலுள்ள தெற்குப்பகுதி சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:

“திருமதி ஜோன்ஸ், என்னை உங்களுக்குத் தெரியுமா?” அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன், கண்டிப்பாக எனக்ககு உங்களைத் தெரியும் திரு. வில்லியம்ஸ். உங்களை எனக்கு சின்னக் குழந்தையிலிருந்து தெரியும், உண்மையைச் சொன்னால் நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம். பொய் சொன்னீர்கள், உங்களுடைய மனைவிக்கு துரோகம் செய்தீர்கள், நம் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததோடில்லாமல் அவர்களுக்கு பின்புறம் போய் அவதூறு பேசினீர்கள். நீங்கள் ஏதோ பெரிய வக்கீல் என்று இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறும் பேப்பர் தள்ளும் இயந்திரத்தின் பெறுமானமே இருப்பீர்கள் என்பதை உங்களுடைய மூளையால் இன்னமும் உணர முடியவில்லை. ஆமாம், எனக்கு உங்களைத் தெரியும்.”

இதைக் கேட்ட வக்கீல் திக்கித்து நின்றுவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் எதிரே அமர்ந்திருந்த எதிர்கட்சி வக்கீலை காண்பித்து கேட்டார், “திருமதி ஜோன்ஸ், எதிர்கட்சி வக்கீலை உங்களுக்குத் தெரியுமா?”

அவள் மறுபடியும், “ஏன், கண்டிப்பாகத் தெரியும். திரு. பிராட்லியை எனக்கு அவருடைய இளமைக் காலத்திலிருந்து தெரியும். அவர் ஒரு சோம்பேறி, கண்மூடித்தனமாக எதையும் நம்புபவர், அது மட்டுமின்றி அவருக்கு குடியில் பிரச்சினை இருக்கிறது. எவருடனும் ஒருங்கான உறவை அவரால் உருவாக்க முடிவதில்லை, அவருடைய சட்டப் படிப்பு இந்த மாநிலத்திலேயே மோசமானது. அது மட்டுமின்றி அவருடைய மனைவிக்கு துரோகம் செய்து மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றார். அதில் ஒரு பெண் உங்களுடைய மனைவி என்பதும் எனக்குத் தெரியும். ஆமாம், எனக்கு அவரைத் தெரியும்.”

எதிர்கட்சி வக்கீல் கிட்டத்தட்ட மயக்கம் போடாத குறை.

நீதிபதி இரண்டு வக்கீலையும் தனது மேஜைக்கு அழைத்து மிகவும் மெல்லிய குரலில் கூறினார், “உங்களிருவர் முட்டாள்களில் ஏதாவது ஒரு முட்டாள் அவளிடம் என்னைத் தெரியுமா என்று கேட்டீர்கள், உங்களிருவரையும் மின்நாற்காலிக்கு (அது அமெரிக்காவின் சாகடிக்கும் முறை) அனுப்பிவிடுவேன்.”

உண்மையில் நிகழ்ந்த வக்கீல் – சாட்சி விவாதங்கள்…
வக்கீல்: இந்த மருந்து உங்களின் நினைவை பாதித்ததா?

சாட்சி: ஆமாம்

வக்கீல்: எந்த வழிகளில் உங்கள் நினைவை பாதித்தது?

சாட்சி: நான் மறந்துவிட்டேன்

வக்கீல்: மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்த ஒன்றை எடுத்துக்காட்டாக

கூறமுடியுமா?

வக்கீல்: உங்களின் கணவர் அன்று காலையில் எழுந்தவுடன் முதலில் என்ன

சொன்னார்?

சாட்சி: “நான் எங்கே இருக்கிறேன் கேத்தி?” என்று கேட்டார்

வக்கீல்: அது ஏன் உங்களை பாதித்தது?

சாட்சி: என் பெயர் சூசன்

வக்கீல்: கடைசிப்பையன், இருபத்தியோரு வயது பையன் இருந்தானே, அவன் வயது

என்ன?

சாட்சி: ஹ்ம்… இருபத்தியோரு வயது.

வக்கீல்: உங்களின் புகைப்படம் எடுக்கப்படும்போது நீங்கள் அங்கே

இருந்தீர்களா?

சாட்சி: கிண்டலடிக்கிறீர்களா?

வக்கீல்: அவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது சரிதானே?

சாட்சி: ஆமாம்

வக்கீல்: ஆண்குழந்தைகள் எத்தனை?

சாட்சி: ஒன்றுமில்லை

வக்கீல்: பெண்குழந்தைகள் எத்தனை?

சாட்சி: கிண்டலடிக்கிறீர்களா? மேன்மைதகு நீதிபதி அவர்களே, எனக்கு வேறு

வக்கீல் வழங்க முடியுமா?

வக்கீல்: உங்களின் முதல் திருமணம் எப்படி முடிவுக்கு வந்தது.

சாட்சி: இறப்பால்

வக்கீல்: யாருடைய இறப்பால்?

சாட்சி: யாருடைய இறப்பால் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

வக்கீல்: கொலைசெய்தவரின் அடையாளங்களை உங்களால் சொல்ல முடியுமா?

சாட்சி: அவனுக்கு நடுத்தர உயரம், தாடி வைத்திருந்தான்

வக்கீல்: கொலையாளி ஆணா பெண்ணா?

சாட்சி: யூகியுங்கள்

வக்கீல்: டாக்டர், நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்தவர்களில் இறந்தவர்கள்

எத்தனை?

சாட்சி: என்னுடைய எல்லா பிரேதப் பரிசோதனையுமே இறந்தவர்களின் மேல்தான்

செய்யப்பட்டது. உங்களின் கேள்வியை மாற்றுகிறீர்களா?

வக்கீல்: சோதனைக்கு சிறுநீர் வழங்குவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

சாட்சி: இந்தக் கேள்வியைக் கேட்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

வக்கீல்: நீங்கள் பிரேதத்தை சோதித்தது எந்த நேரம் என்று

நினைவிருக்கிறதா?

சாட்சி: பிரேதப் பரிசோதனை 8:30 மணிக்கு ஆரம்பித்தது

வக்கீல்: திரு. டென்டான் அந்த நேரம் இறந்திருந்தாரா?

சாட்சி: இல்லை, அவர் மேஜையின் மேல் உட்கார்ந்துகொண்டு நான் ஏன் அவரின்

பிரேதத்தைப் பரிசோதனை செய்துகொண்டிருக்கின்றேன் என்று

யோசித்துக்கொண்டிருந்தார்

வக்கீல்: டாக்டர், ஒருவர் தன்னுடைய தூக்கத்தில் இறந்துவிட்டால் மறுநாள்

காலைவரை அது அவருக்குத் தெரியாதுதானே?

சாட்சி: நீங்கள் உண்மையில் பார் தேர்வில் தேறினீர்களா?

வக்கீல்: டாக்டர், பிரேதப் பரிசோதனை செய்யும் முன்னர் நீங்கள் நாடி

பிடித்துப் பார்த்தீர்களா?

சாட்சி: இல்லை

வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதித்தீர்களா?

சாட்சி: இல்லை

வக்கீல்: மூச்சு வருகிறதா என்று பார்த்தீர்களா?

சாட்சி: இல்லை

வக்கீல்: அப்படியென்றால் நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்யும் முன்னர்

அவருக்கு உயிர் இருந்திருக்கலாமல்லவா?

சாட்சி: கண்டிப்பாக இல்லை

வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்?

சாட்சி: ஏனென்றால், அவருடைய முளை என்னுடைய மேஜையின் மேலிருந்த ஜாரில்

இருந்தது

வக்கீல்: அப்படியா? இருப்பினும் அவர் உயிரோடிருக்கும் சாத்தியக்கூறு

இருக்கிறதா?

சாட்சி: ஆமாம், அவர் இன்னமும் உயிரோடிருந்து வக்கீலுக்குப் படிக்கும்

சாத்தியம் இருக்கிறது.