ருத்ர முகம் குறிச்சொல்லிட்ட பதிவுகள்

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு

திட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்துவேல் டென்ஷனாகிவிட்டாலே புகையை ஊதுபவர். ஆனால் இன்று வேர்த்துவழிந்தும் கூட மறுபடியும் புகைப்பிடிக்கவே அவருக்குத் தோன்றவில்லை. யாரிந்த ருத்ரன்? இரகசிய போலீசா? சி.பி.ஐ அல்லது ‘ரா’ அமைப்பை சார்ந்தவரா? அப்படியெல்லாம் தெரியவில்லையே. கண்டிப்பாக அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஒரு தனிநபர் இந்த அலுவகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதும் அவர் கூறுவதை இந்த நிறுவன அதிபர்கள் கேட்க வேண்டும் என்ற அவசியமும் சாத்தியமில்லாதது.

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு

பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
சிவசங்கரின் தொலைபேசி அழைப்பை ஏற்று விரைந்து வந்த நந்தினி கண்ணெதிரே விரிந்த காட்சியைக் கண்டு ‘ஆ’வென அலற வாயைத் திறக்க லூயி பாய்ந்து அவளின் வாயைப் பொத்தினான்.
சிவசங்கர் வேர்த்துவழிந்துகொண்டு நின்றுகொண்டிருக்க அவருக்கு முன்னால் இரண்டு பக்கங்களிலும் கைகளில் அதிநவீன இயந்திரத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டிருந்த நெல்சனும் நிக்கோலசும் தெரிந்தார்கள். லிண்டா நான்கு பேருக்கும் நடுவில் மையமாக நின்றுகொண்டிருந்தாள்.

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து

திட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்து வேல், பெயருக்கு ஏற்ப திருமணம் ஆனபிறகும் பிற பெண்களின் மேல் காதல் கொள்பவர் என்பதை அவருடைய வயதுக்கு மீறிய அலங்காரங்கள் கூறியது. வயது ஒரு நாப்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் தோற்றத்தில் இருபது வயது இளமையைக் காட்ட மிகவும் கஷ்டப்பட்டிருந்தார். தாடையிலும் உதட்டுக்கு மேலும் ஒரு முடிகூட தெரியாத அளவு மழுங்க சவரம் செய்திருந்ததோடு மட்டுமின்றி கண்ணாடி போட வேண்டிய கண்களுக்கு சிரமமிருந்தாலும் பரவாயில்லை என்று கான்டாக்ட் லென்ஸ் போட்டிருந்தார். [...]

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு

இயங்குதள மென்பொருட்கள் பிரிவு, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
நீண்டு வளர்ந்திருந்த தளம் முழுவதும் கண்களை உறுத்தாத வெளிர் பச்சை நிறத்தில் இதமாக தெரிந்த மூன்று பக்க சுவர்களுக்கு அடுத்த நான்காவது பக்கம் முழுவதும் சூரியக் கதிர்கள் தடுக்கப்பட்ட தடிமனான கண்ணாடிகளால் சூழப்பட்டு வெளியுலக காட்சிகளை கருநீலநிறத்தில் நிறமேற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தன. வெளியே தகித்துக்கொண்டிருந்த சென்னையின் காலைநேர வெயிலின் கொடுமையை புத்தி உணர்ந்தாலும் உடல் உணராத வண்ணம் நடுநாயகமாக வீற்றிருந்த சக்திவாய்ந்த குளிர்காற்றுப் பெட்டியின் திட்டமிட்ட செயற்கைக் குளிர் இதமாக்கியிருந்தது. [...]

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று

பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
நிக்கோலஸ் மற்றும் நெல்சனின் கைகளில் முளைத்திருந்த கறுப்பு நிற மெஷின் கன்களைப் பார்த்து சிவசங்கருக்கு வாயடைத்துவிட்டது. தூதரக அதிகாரிகளுக்கு எப்போதிருந்து மெஷின் கன்களை உபயோகப்படுத்தும் உரிமை கிடைத்தது? இவர்கள் உண்மையான தூதரக அதிகாரிகள் போலத் தெரியவில்லையே?
“லிண்டா, நீங்கள் எல்லாம் யார்? எதற்காக அவர்களிருவரும் கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றார்கள்?”

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டு

பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை, தமிழ்நாடு…
டொக் டொக்…
கதவு சப்தத்தை கேட்டு தனது கணினி திரையிலிருந்து பார்வையை விலக்கிய சிவசங்கருக்கு நடுத்தர வயது. தலையில் ஒரு வெள்ளை முடிகூடத் தெரியாமல் (நிரந்தர சாயம் அடிப்பவர்) தனது வயதிற்கும் சற்றுக் குறைவான தோற்றத்தை வழங்கியபடி தெரிந்த சிவசங்கர் பெயருக்கு ஏற்ப தீவிர சிவன் பக்தர் என்பதை டை அணியாத கழுத்து வளைவில் தெரிந்த உத்திராட்ச மாலை உறுதிசெய்தது. தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சிஸ்டம் அப்ளிக்கேஷன்ஸ் [...]

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஒன்று

சிருங்கார சென்னை, தமிழ்நாடு…
சென்னையின் சுள்ளென்ற வெயிலடிக்க ஆரம்பித்துவிடும் காலைப்பொழுதின் அவசரத்தில் அலுவலகத்திற்கு விரையும் அலுவலகர்களும், புத்தகங்களின் சுமையழுந்தியதால் இளமையில் கூன்விழுந்த குழந்தைகளும், இளமைத்துள்ளல் என்ற நினைப்பில் படிக்கட்டில்தான் பயணம் செய்வேன் என்று அடம்பிடிக்கும் இளவட்ட கல்லூரி மாணாக்கர்களும், அவர்களின் சீண்டல்களுக்குப் பயந்து ஒளிந்துகொள்ள முயற்சி செய்து முடியாமல் வியர்வை மழையில் நனைந்து அதில் அங்கங்கள் தெரிந்துவிடுமோ என்ற கலாச்சார பயத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் இளம்பெண்களும், அப்படிப்பட்ட கலாச்சாரம் என்றால் கிலோ எத்தனை விலை என்று கேட்கும் தகவல்தொழில்நுட்ப [...]

கருத்துகள் இல்லை

மூன்றாவது கண் – ருத்ர முகம்: முன்னோட்டம்…

புது தில்லி, இந்தியா…
பல்வீந்தர் சிங் தனது தலைப்பாகையை அணிந்துகொண்டு இருந்தார். பழக்கப்பட்ட கைகள் தன்னாலேயே சுற்றுகளை போட்டுக்கொண்டிருக்க அவரின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
‘பாருக்குள்ளே சிறந்த நாடு எங்கள் பாரத நாடு’ என்று தமிழ்க்கவிஞன் ஒருவன் பாடிய இந்த மேன்மைமிகு பாரத நாட்டின் ஜனாதிபதி தான் என்பதை இன்னமும் அவரால் நம்பமுடியவில்லை. எங்கோ ஒரு மூலையில் சமூகசேவையில் மூழ்கி வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமலிருந்த தன்னை இப்படி இந்தியாவின் அரசியல் மாற்றங்கள் சட்டென்று ஏணியேற்றி ஜனாதிபதி பதவிக்கு [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme