புது தில்லி, இந்தியா…
பல்வீந்தர் சிங் தனது தலைப்பாகையை அணிந்துகொண்டு இருந்தார். பழக்கப்பட்ட கைகள் தன்னாலேயே சுற்றுகளை போட்டுக்கொண்டிருக்க அவரின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
‘பாருக்குள்ளே சிறந்த நாடு எங்கள் பாரத நாடு’ என்று தமிழ்க்கவிஞன் ஒருவன் பாடிய இந்த மேன்மைமிகு பாரத நாட்டின் ஜனாதிபதி தான் என்பதை இன்னமும் அவரால் நம்பமுடியவில்லை. எங்கோ ஒரு மூலையில் சமூகசேவையில் மூழ்கி வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமலிருந்த தன்னை இப்படி இந்தியாவின் அரசியல் மாற்றங்கள் சட்டென்று ஏணியேற்றி ஜனாதிபதி பதவிக்கு [...]
07.6.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
சூரியனின் காலைக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலூரின் திடீர்குப்பம் கிராமத்தைச் சூடேற்றிக்கொண்டிருக்க, கிராமத்தை ஒட்டி இருந்த பென்னையாற்றில் சூரியக் கதிர்கள் பட்டு எதிரொலித்தது பொன்னை அள்ளிக் கொட்டியது போல ஜொலிஜொலித்தது. ஆற்றுக்கு இந்தப் பக்க கரையில் வீடுகள் குட்டி குட்டியாக முளைத்திருக்க ஆற்றின் மறுக் கரையில் நீண்ட வயல்வெளியும் அதை ஒட்டிய கள்ளுக் கடையும் தெரிந்து. ஆற்றில் எப்போதுமே இடுப்பளவு தண்ணீர் என்பதால் தைரியமாக அந்த அதிகாலை வேலையிலும் ஆற்றைக் கடந்து கள்ளுக் கடைக்கு சென்றுகொண்டிருந்த ‘குடி’மகன்களின் [...]
07.6.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
மதுரையின் அதிகாலைச் சூரியனின் இதமான சூட்டில் எழுந்த திருமங்கலம் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சோம்பலை முறித்துக்கொண்டு வழக்கமான சுறுசுறுப்பை கையிலெடுத்தது. அதிகாலையிலேயே பால் போடும் பையன்களும் பேப்பர் போடும் பையன்களும் தத்தமது வேலையை உத்தமமாக செய்துகொண்டிருக்க, அதிகாலை பூஜைக்கான ஆலய மணிகள் அடிக்கத்துவங்கிவிட்டது. ஹிந்துக் கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் கலந்து ‘மதத்தினால் வேறுபடினும் மனத்தினால் நாம் இந்தியரே’ என்ற இந்திய ஒற்றுமையை பறைசாற்றிக்கொண்டிருந்தது. வாசலில் தெளித்து கோலமிடும் பண்பாடு இன்னமும் எம்மை விட்டு [...]
07.3.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்