ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » பொதுவானவை

தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!
அன்பு நண்பர்களே,

மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். இனிமேல் நண்பர்கள் http://www.tamilamirtham.org/ என்று மறந்து தட்டச்சிட்டாலும்கூட அது http://www.tamizhamutham.org/ என்கிற புதிய சரியான முகவரிக்கு செல்லும்படி திருப்பியனுப்பிவிட்டேன். கருத்தும் ஆலோசனையும் வழங்கிய உங்களனைவருக்கும் மிகவும் நன்றி…

http://www.tamizhamutham.org/

என்பதே இனி நமது தமிழமுதத்தின் முகவரி.

நன்றி…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என் இனிய தோழர் தோழியரே,

உங்களனைவருக்கும் எனது உள்ளங் கணிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தென்னாடுடைய ஈசன் உங்களனைவரையும் காப்பாற்றி அருளுவானாக!

இந்த இனிய தமிழ் புத்தாண்டில் நான் சில யோசனைகளை செய்கின்றேன். தவறாயிருப்பின் தயவு செய்து மன்னித்து மறந்துவிடுங்கள்:

நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் வருடங்கள் தெரியும்?

நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்கள் தெரியும்?

நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எண்கள் தெரியும்?

இதற்கு பதில் கண்டிப்பாக நிறைய பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்னையும் இந்தப் பட்டியலில் சேர்த்துத்தான் சொல்கின்றேன். எனக்கு தமிழ் மிகவும் பிடித்த மொழி என்னுடைய தாய் மொழி. ஆனால் எனக்கே தமிழ் வருடங்களும் தமிழ் மாதங்களும் எண்களும் தெரியாது. இதுவரை தெரிந்து கொள்ளவும் நான் முயன்றதில்லை.

இந்த வலைக்குழுமத்தை நான் ஆரம்பித்ததற்கு காரணமே ஒரு நல்ல தமிழ் பேசும் குழுமத்தை வலையில் அமைத்து தமிழுக்கு சேவை புரிவோம் என்னும் ஆர்வத்தினால்தான். ஆனால் நானே தப்பாயிருக்கின்றேன். சீக்கிரமே இவற்றை நான் தெரிந்து கடைபிடிக்கவும் முயல வேண்டும். குறைந்த பட்சம் தினமும் இன்று தமிழ் தேதி, மாதம் மற்றும் வருடம் என்ன என்பதாவது தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டிலும் நான் ஏதாவது சபதம் எடுத்துக்கொள்வதும் அப்புறம் அதை கடைபிடிக்க முடியாமல் அல்லல் படுவதும் வாடிக்கை. இது வரை சொல்லப் போனால் நான் தமிழ் புத்தாண்டில் அப்படி எதுவும் எடுத்துக்கொண்டதில்லை. ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டில் எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் அது நான் என் தாய்க்கு செய்யும் அவமானம் என்ற பயத்தினால் இருக்கலாம்.

ஆனால் இந்தத் தமிழ் புத்தாண்டில் ஒரு சபதம் துணிந்து எடுத்துள்ளேன். அது சில சிறந்த ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து நம் தமிழர்களுக்காக எழுதவேண்டும். ஆங்கில புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்தால்தான் அழகாக இருக்கும் என்ற நிலை மாறி அவை தமிழிலும் சிறப்பாக அமைய முடியும் என்று உணர்ப்பிக்க வேண்டும். பார்க்கலாம்…

நல்வரவு!
அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வரவு!!!

உங்களனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

இந்த புத்தாண்டு உங்களுக்கு இனிமையையும், பல நலன்களையும், சந்தோஷத்தையும், அமைதியையும், வெற்றிகளையும், படிப்பினைகளையும், மற்றும் பல அனுபவங்களையும் வழங்க எல்லாம் வல்ல, எம்பெருமான், தென்னாடுடைய சிவனை வேண்டுகின்றேன்.

இந்த புத்தாண்டில் நான் செய்ய நினைத்த முக்கிய செயல் தமிழில் ஒரு வலைப்பதிவை எழுதுவதுதான். ஏற்கனவே எனது ஆங்கில வலைக்குறிப்பில் சில தமிழ் பக்கங்களை நான் அமைத்திருந்தாலும் (அவற்றையெல்லாம் இங்கே விரைவில் கொண்டு வந்துவிடுகின்றேன்) தமிழுக்கென்று ஒரு தனிப்பட்ட வலைப்பதிவு வேண்டும் என்று நான் நெடுங்காலம் யோசித்ததுண்டு. எனது நண்பர்கள் ஏற்கனவே மூன்று வலைக்குறிப்புகளை எழுதுகின்றாய், இதில் தமிழுக்கென்று தனியாக வேறா என்று என்மேல் கொண்ட பாசத்தால் அன்புடன் கண்டிக்கின்றார்கள். ஆனால், தமிழுக்கென்று தனிப்பட்ட வலைத்தளமான தமிழ் அமிழ்தத்தையே வழங்கிய எனக்கு, எனது தமிழ்ப்பதிவுகளுக்கு மட்டும் ஆங்கில வலைக்குறிப்பை உபயோகப்படுத்துவது சரியாகத் தோன்றவில்லை. ஆகவே, இந்தப் இனிய புத்தாண்டில், எனது தமிழ் வலைப்பதிவை உருவாக்கிவிட்டேன்.

இங்கே நீங்கள் பார்க்கப்போவதெல்லாம் தமிழ், தமிழ், தமிழ்தான். அதாவது, தமிழின் முப்பரிமானங்களான இயல், இசை, நாடகம் மட்டுமின்றி அதன் நான்காவது பரிமானமான தகவல் தொழில்நுட்பத்தையும் கொடுக்கப் போகின்றேன். நீங்களும் கூடுமான வரையில் (தமிழராயிருப்பின்) தமிழிலேயே உங்களுடைய கருத்துக்களை பறிமாறுங்கள். தயவு செய்து தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுத வேண்டாம். தமிழ் அறிந்தவர்கள் எளிதாக தமிழில் வலைத்தளங்களில் அச்சடிக்க யூனிகோடு முறை இருக்கின்றது. இந்த வலைப் பதிவு உங்களின் கனிணியில் நன்றாகத் தெரிந்தாலே உங்களின் இயங்குதளம் யூனிகோடை அனுமதிக்கிறது என்பது திண்ணம். ஆகவே, தமிழில் யூனிகோடு முறையில் எப்படி எழுதுவது என்று எனது தமிழ் அமிழ்தம் பக்கத்தில் மிகவும் விரிவாக எழுதியுள்ளேன் அதை இங்கே காணலாம்.

தமிழரல்லாத பல வெளிநாட்டுக்காரர்களும், வேற்றுமொழிக்காரர்களும் தமிழை கற்றுக்கொள்ள தமிழ் அமிழ்தத்தில் சீக்கிரமே குறிப்புகளை வழங்க இருக்கின்றேன். தமிழ் எவ்வளவு அருமையான மொழி என்பது அதை அநுபவித்தவர்களுக்கே தெரியும். 18 மொழிகளை படித்தறிந்த மகா கவிஞன் பாரதி கூட, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று வியக்கின்றான். அவனுடைய தாசன் பாரதிதாசனோ, “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்று பெருமிதம் கொள்கின்றான். இவர்கள் தமிழராயிருப்பதால் இப்படி என்று நீங்கள் கருதினால், ஆங்கிலரான ஜார்ஜ் யுக்ளோ போப் (அன்பாக ஜி.யு.போப்) தமிழின் மேல் கொண்ட காதலினால் தனது எண்பதாவது வயதில் சில அற்புத தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கின்றார். இப்படி தமிழரல்லாத எவரையும் வசீகரிக்கும் தமிழ், தமிழரை அதிகம் வசீகரிக்கக் காணோம். அதற்கு முக்கிய காரணம் இந்த நவீன உலகில் தமிழ் அதிகம் செல்லுபடியாகாது என்கிற எண்ணமாக இருக்கலாம். அவ்வித எண்ணமுடைய மடையர்களுக்கு சம்மட்டியாலடிப்பது போல் தமிழிலும் எந்தவித நவீன தொழில்நுட்பங்களையும் கற்க முடியும் என்பதை நான் இந்த வலைப்பதிவின் மூலம் நிரூபிக்க உள்ளேன்.

அணைவருக்கும் எனது வாழ்த்துக்கள்…

மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்

தமிழ் எமது உயிருக்கு நேர்…

தமிழ் அமிழ்தம்