ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » சிறுகதை

கடவுள்-2048
25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே? துக்கம் தொண்டையை அடைக்க அதைத் திறக்க உள்ளே விட்ட ஆல்கஹாலின் அளவு அதிகமானதில் இப்போது உலகமே சுற்றுகிறது. ஆமாம் இது என்ன இடம், திடீரென்னு வெள்ளை வெளேரென்று? ஒருவேளை நண்பன் கூறியது போலவே இறந்து சொர்க்கம் வந்துவிட்டேனா? அன்பு மனைவி உமா இங்கே இருக்கின்றாளா?

“ஹலோ மிஸ்டர் ஈஷ்வர். வெல்கம் டூ 2048!”

“2048 ஆ? யார் நீங்கள்? என்ன சொல்கின்றீர்கள்? இது என்ன இடம்?”

“மிஸ்டர் ஈஷ்வர் இது 2048ம் வருஷம், நீங்கள் இருந்த 2008ம் வருஷத்திலிருந்து கால இயந்திரத்தின் உதவியால் இந்த வருஷத்திற்கு ஒரு முக்கியமான சேவை வேண்டி அழைத்துவரப் பட்டிருக்கின்றீர்கள். என் பெயர் சந்திரபிரகாஷ். நான் இந்த இந்திய விஞ்ஞான நிறுவனத்தின் மேலாளர்.”

“அட, 40 வருஷம் கழிச்சு வந்துட்டேனா? சரிதான். என்ன சேவை அது?”

“உங்களுக்கு விளக்கமாக சொல்கின்றேன். கொஞ்சம் எழுந்து இங்கே சுற்றிலும் பார்க்கின்றீர்களா?”

எழுந்து சுற்றிலும் பார்த்த ஈஷ்வருக்கு மறுபடியும் தலை சுற்றியது. இன்னமும் போதை தெளியவில்லை. வெள்ளை வெளேரென்று இருந்த அந்த வட்ட வடிவ கட்டிடத்தின் ஒரு மூலையிலிருந்த ஆய்வுக்கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். சுற்றிலும் அவனால் புரிந்துகொள்ள முடியாத அறிவியலில் மிகவும் முன்னேறிய கருவிகள் தெரிந்தன. அறைக்கு நேரெதிரில் ஒரு ஆய்வுக்கூடம் தெரிய அதிலிருந்த பெட்டகமும் பக்கத்திலிருந்த மனிதனைப் போல தோற்றமளித்த ஒரு இயந்திரமும் தெரிந்தது.

“நீங்க பார்த்த அந்த பெட்டகம் உங்களுடையதுதான். அதற்குப் பக்கத்திலிருக்கும் கடவுள்-2048 இயந்திரமும் உங்களின் கண்டுபிடிப்புத்தான். இதுவெல்லாம் நீங்கள் உங்களின் 65-வது வயதில் சாதித்த விஷயங்கள். இருப்பினும் எதிர்பாராத விதமாக நீங்கள் தற்கொலை செய்துகொண்டீர்கள். அது ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. அதே சமயம் உங்களின் ஆய்வு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவனங்களை அந்தப் பெட்டகத்தில் வைத்து அதற்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கும் நுழைவுச்சொல்லையும் வைத்துவிட்டீர்கள். என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் இறந்த மனிதர்களை உயிர்பிக்கும் வழியை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் கால இயந்திரத்தின் மூலம் உங்களை இங்கு வரவழைத்தோம். எங்களுக்கு அந்த நுழைவுச்சொல்லை நீங்கள் வழங்க வேண்டும். இந்த இயந்திரத்தைப் பற்றிய குறிப்புகளும் ஏன் அந்த ஆவணங்கள் முக்கியம் என்ற விவரங்களும் இந்தக் கோப்பில் இருக்கின்றது படித்துவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நுழைவுச்சொல்லைக் கண்டுபிடித்தவுடன் இங்கே இருக்கும் பட்டனை அழுத்தினால் நாங்கள் வந்து உங்களை மீண்டும் 2008-ம் வருஷத்திற்கே அனுப்பிவிடுவோம்.”

தலையும் காலும் புரியாவிட்டாலும் வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்ட ஈஷ்வர் அதன் மேல் பார்வையை செலுத்த சந்திரபிரகாஷ் சென்றுவிட்டார். குறிப்புகளைப் படிக்க படிக்க போதை முழுவதும் தெளிந்துவிட்டது ஈஷ்வருக்கு. உண்மையிலேயே இது 2048ம் வருஷம்தான். இல்லையென்றால் 2008-ல் இதுபோன்றவை சாத்தியமில்லை. படித்தவற்றின் சாராம்சம் அவன் மனதில் ஓடியது.

2008-ம் ஆண்டில் ஒரு குண்டு வெடிப்பில் தன் காதல் மனைவியை இழந்த ஈஷ்வர் வேறு கல்யாணம் செய்துகொள்ளாமல் தன்னை நாட்டின் பாதுகாப்புக்கு அற்பணித்துக்கொள்ள, இனிவரும் வருஷங்களில் முளைவிடும் எந்தத் தீவிரவாதச் சக்தியையும் முறியடிக்கும் ஒரு வலிமையான இயந்திரத்தை தயாரிக்க மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய அறுபத்தியைந்தாவது வயதில் கண்டுபிடித்ததுதான் கடவுள்-2048 இயந்திரம். இந்த இயந்திரத்தின் சக்தி மனிதர்களுக்கு அப்பாற்பட்டது. இதனால் எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும், இல்லை முழுவதும் கண்ணிலிருந்து மறைந்துவிடவும் முடியும். எந்தவிதமான படையையும் தனியாளாய் தோற்கடிக்கும் வல்லமை பெற்ற ஆயுதங்களை தன் உடலில் கொண்டது. எந்தவிதமான குறுகிய இடத்திற்குள்ளும் நுழையுமளவிற்கு உடலை குறுக்கிக்கொள்ளவும் சக்திவாய்ந்த கேட்டறியும் மற்றும் படம்பிடிப்பு கருவிகளையும் இயக்க வல்லது. மற்றவர்களிடம் மாட்டிக்கொண்டால் தன்னுடைய தொழில்நுட்பத்தை அவர்கள் அறியாத வண்ணம் சட்டென்று தன்னுடைய இதயப்பகுதியிலிக்கும் சக்திவாய்ந்த சிறிய அணுகுண்டால் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பை தூள்தூளாக்கிவிட்டு அழித்துக்கொள்ள வல்லது. ஆனால் இதன் மூளைப்பகுதியாக இயங்க வேண்டிய செயற்கை மூளைத்திறன் (Artificial Intelligence) மட்டும் இன்னமும் முழுவதுமாக முடியவில்லை. அதை முடித்துவிட்டாரோ என்னவோ என்று அறியாத வண்ணம் அதற்குள் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

நாட்டின் பாதுகாப்பு பற்றிய இந்த விஷயத்திற்கு கண்டிப்பாக தான் உதவ வேண்டும் என்று முடிவெடுத்த ஈஷ்வர் உடனே தான் நுழைவுச்சொல்லை வடிவமைக்கும் முறையை மனதில் இறுத்தினான். அவன் இன்று இருந்தால் எந்த நுழைவுச்சொல்லை வைப்பான் என்று யோசித்ததில் மூளையில் பல்பு எரிய சட்டென்று எழுந்துசென்று பெட்டகத்தை நெருங்கி உம்முக்குட்டி2008 (அவனுக்கு மட்டுமே தெரிந்த காதல் மனைவியின் செல்லப்பெயரும் அவனால் மறக்க இயலாத வருஷமும்) என்று தட்டச்சிட பெட்டகம் திறந்தது. கையில் முதலில் அகப்பட்ட ஆய்வுக்குறிப்புகளுக்கு மேல் ஒரு டைரி இருந்தது. அதை எடுத்து கடைசி பக்கங்களை ஆராய்ந்த ஈஷ்வருக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தான் தயாரித்த கடவுள்-2048 இயந்திரத்தின் செயற்கை மூளைத்திறன் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அதனுடைய மூளைத்திறனால் ஏற்படப்போகும் அழிவுத்திறனும் அதை தவறான வழிகளில் பயன்படுத்த சந்திரபிரகாஷ் முயலுவதையும் அறிந்த ஈஷ்வர் அந்த இயந்திரத்தையும் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் முழுவதும் அழித்துவிட முயன்ற இரவுதான் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துவிட்டார். ஆனால் அந்தத் தற்கொலையைப் பற்றிய எந்தக் குறிப்பும் டைரியில் இல்லை. உண்மையில் தற்கொலை செய்துகொள்வதென்றால் முழுவதையும் அழிக்காமல் செய்ய வாய்ப்பேயில்லை.

பலவாறாக சிந்தித்த ஈஷ்வர் கடைசியில் ஒரு முடிவெடுத்து மொத்த ஆவணங்களையும் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு இயந்திரத்தை அணுகினான்.

“இதில் நீங்கள் எதிர்பார்த்த 2000 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் இருக்கின்றன மிஸ்டர் சந்திரபிரகாஷ். இன்று எங்களுக்கு கடவுள்-2048 கிடைக்க வேண்டும்.”

“கண்டிப்பாக கிடைத்துவிடும். அது கிடைக்க வேண்டுமென்றுதானே, முழுவதும் தயாராகிவிட்டது என்று சொல்லிய ஈஷ்வரின் சொல்லை நம்பி அவரைக் கொலை செய்து தற்கொலை போல செய்தேன். ஆனால் அவர் இன்னமும் செயற்கை மூளைத்திறனை அமைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது போயிற்று. ஆனால் அவரின் முந்தியகாலத்திலிருந்து கொண்டு வந்திருக்கும் இந்த ஈஷ்வர் எப்படியும் நுழைவுச்சொல்லை கண்டுபிடித்துவிடுவான். அப்புறம் அந்தக் குறிப்புகள் கிடைத்துவிட்டால் செயற்கை மூளைத்திறனை பொருத்திவிடலாம். வாருங்கள் அடுத்த அறையிலிருக்கும் திரையில் ஆய்வுக்கூடத்தில் நடப்பதை பார்வையிடலாம்.”

அடுத்த அறைக்குள் நுழைந்த அமெரிக்கனும் சந்திரபிரகாஷும் அங்கே திரையில் ஈஷ்வர் பெட்டகத்தை திறந்து எல்லா ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு கடவுள்-2048 இயந்திரத்தை அணுகுவதைப் பார்த்து சந்தோஷத்தில் மூழ்கினர்.

ஆய்வுக்கூடத்தின் பக்கவாட்டுச் சுவற்றினருகே வந்த சலீம் தன்னுடைய முதுகுப்பையிலிருந்த சிறு கருவியை எடுத்து இயக்க சுவற்றில் மறைந்திருந்த ஒரு திறப்பு திறந்து வழிவிட்டது.

ஆகா, எவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டது இன்று சாத்தியமாகப்போகின்றது! கடவுள்-2048 கண்டிப்பாக நம் ‘அல்லாஹ் ஜிஹாத்’ தீவிரவாதக் குழுவிற்கு பயன்படப்போகின்றது. நினைத்தாலே சிரிப்புதான் வருகின்றது. தீவிரவாதத்தை அழிக்கும் கடவுள் தீவிரவாதிகளிடமே சேரப்போகின்றான். ஆஹா, தோழர்கள் பூரித்துப்போவார்கள்.

கதவைத்திறந்து உள்ளே நுழைந்த சலீம் கண்ணெதிரில் விரிந்த காட்சியைப் பார்த்து திகைத்துவிட்டான். யாரிந்த இளைஞன்? ஈஷ்வரைப் போலவே இருக்கின்றானே? அவருடைய மகனாயிருப்பானோ? இல்லையே அவர் மனைவி இறந்தபின் யாரையும் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே? ஆமாம், கல்யாணம் செய்தால்தான் குழந்தையா? இன்றைக்கு இருக்கும் விஞ்ஞானத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளாமலேயே குழந்தையை உருவாக்கும் வித்தைகள் வந்துவிட்டதே. ஈஷ்வர் அப்படி இவனை உருவாக்கியிருப்பாரா? அட, நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கிய ஆவணங்கள் அனைத்தும் அவன் கைகளிலிருக்கின்றதே? ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? ஆஹா, அல்லாஹ் எங்களை கைவிடவில்லை.

அந்த இளைஞனை நோக்கி சலீம் சிறுக சிறுக முன்னேறினான்.

அமைதியாகத் தெரிந்த இந்திய விஞ்ஞான நிறுவனத்தின் வட்டவடிவ கட்டிடத்தை சுற்றி காவலுக்கு இருந்த காவலர்கள் திடீரென்று மயக்கமாகி விழ காவல் இயந்திரங்கள் செயலற்று நின்றன. இருட்டிலிருந்து திடீரென்று உதயமானார்கள் 12 பேர் கொண்ட அந்தக் குழுவினர். அவர்களின் தலைவன் போல தெரிந்தவனின் வாய் மெதுவாக அசைய மற்றவர்களின் காதுகளுக்குள் கண்ணுக்குத் தெரியாமலிருந்த சின்னஞ்சிறிய கருவியில் அவன் குரல் தெளிவாக விழுந்தது.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத். தோழர்களே இன்றைய நாள் நம் சரித்திரத்தின் ஒரு முக்கிய நாள். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே நமக்கு அடிமையாக்கும் சக்திவாய்ந்த கடவுள்-2048 இயந்திரமும் அதுபோன்ற இயந்திரங்களடங்கிய ஒரு படையையே உருவாக்க உதவும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கப் போகின்றன. திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதுதானே?”

11 பேரும் ஒரே குரலில் ஞாபகம் இருக்கின்றது என்று கூற, திருப்தியை முகத்தில் தழுவவிட்ட முகம்மது கான் மறுபடியும் தன் உதடுகளை மெதுவாக அசைத்தான்.

“பெட்டகத்தை திறக்கும் நுழைவுச்சொல்லை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் நம்மிடமுள்ள சக்திவாய்ந்த இந்த கருவியினால் பெட்டகத்தையே உடைக்க வேண்டும். உள்ளிருக்கும் காகிதங்கள் எதுவும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அழிந்துவிடாமல் இந்தக் கருவி பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளேயிருக்கும் கடவுள்-2048 ஐ வெளியே கொண்டு வருவதுதான். நான் ஆவணங்களை கொண்டு வருகின்றேன். யார் எதிரில் வந்தாலும் தடுக்க முயன்றாலும் உடனே இந்தத் துப்பாக்கியை இயக்கினால் அவர்கள் பஸ்பமாகிவிடுவார்கள். புறப்படுவோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்!”

பக்கவாட்டுச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த முகம்மது கான் உள்ளே தெரிந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஈஷ்வரைப் போலவே இருக்கும் இந்த இளைஞன் யார்? அது யார் மற்றொரு பக்கத்திலிருந்து அந்த இளைஞனை நோக்கி வருவது? அவன் வருவதைப் பார்த்தால் கடவுள்-2048 ஐ திருட வந்தவன் போலிருக்கின்றதே? ஈஷ்வர் இறந்துவிட்டதால் அந்த இளைஞன் நமக்கு பயன்படுவானே. இவன் போகும் வேகத்தைப் பார்த்தால் அவனைக் கொன்றுவிடுவான் போலிருக்கின்றது. உடனே அதை தடுக்க வேண்டும்.

முகம்மது கானின் இடுப்பிலிருந்த சத்தமிடாத லேசர் துப்பாக்கியை நோக்கி கைகள் சென்றன.

இயந்திரத்தை அணுகிய ஈஷ்வர் மெலிதாக தனக்குள் புன்னகைத்துக்கொண்டான். வந்தே மாதரம்! இயந்திரத்தின் மார்பிலிருந்த ஒரு சூட்சும பொத்தானை அவன் அழுத்த மார்புக்கூடு திறந்துகொள்ள அதனுள்ளிருந்த ஒரு விசையை நோக்கி கைகளை கொண்டு சென்றான்.

அதே சமயம்…

திரையில் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த சந்திரபிரகாஷும் அமெரிக்கனும் அதிர்ச்சியடைய, நடக்க இருக்கும் ஆபத்தைக் கண்ட சலீம் வேகமாக ஓடிவர, சலீமைக் குறிவைத்துக்கொண்டிருந்த முகம்மது கான் கைகளை தழைத்துக்கொண்டு ஈஷ்வரை நோக்கி ஓடிவர, எதையும் கவனிக்காத ஈஷ்வர் அந்த விசையை அழுத்த அவனைத்தவிர மற்றவர் அனைவரும் ஒரே நேரத்தில் அலறினார்கள், “நோ……”

இயந்திரத்தின் வீரியமிக்க அணுகுண்டின் வெடிப்பில் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பும் இந்திய விஞ்ஞான நிறுவனமும் தூள்தூளாகின.

எத்தனை முறை கூறியும் கேட்காமல் அதிகம் குடித்துவிட்டதில் மயங்கி விழுந்துவிட்ட ஈஷ்வரின் மூச்சை சோதித்துப் பார்த்த சிவா அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.

காதல் மனைவி இறந்துவிட்டாள் என்று அவளுடன் உடன் கட்டை ஏறிவிட்டாயா நண்பா?????

சிவாவின் தொண்டையிலிருந்து இரவைக்கிழித்துக்கொண்டு புறப்பட்ட அலறலில் அந்த சுற்றுப்புறமே அதிர்ந்தது.

(வலைப்பதிவாளர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கொஞ்சம் பெரிய சிறுகதை)

ஐ லவ் யூ அப்பா
வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவ அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை புத்திக்கு புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான்.

“ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டீ…”

“ஹை… அப்பா… இன்னைக்கும் சீக்கிரமே எழுந்திட்டீங்கன்னு நினைச்சேன்!” நம்ப முடியாமல் அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் சுபாஷ்.

“இன்னைக்கு உன்னோட பர்த்டே இல்லையாடா? எப்படி எழுந்து போயிடுவேன்னு நினைச்சே? அம்மா உனக்கு பிடித்த பாதாம் கேசரி செஞ்சுட்டிருக்கா. இன்னைக்கு நாங்க ரெண்டு பேருமே நேற்றே அப்ளிகேஷன் போட்டு 2 மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டோம்.”

“அதானே பார்த்தேன். எப்பவுமே காலங்கார்த்தாலயே எழுஞ்சு நான் கண் முழிக்கிறதுக்குள்ள வேலைக்கு போயிட்டு நைட்டு நான் தூங்கற நேரம்தானே வருவீங்க?”

“வேலை அப்படியாச்சேடா. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை உன்னோடதானே இருக்கிறோம்?”

“அந்த ஒரு நாள் எனக்கு போதமாட்டேங்குதுப்பா. என்னோட ஸ்கூலுல படிக்கிற பசங்க எல்லாம் அவங்க அப்பா அம்மாவோடதான் வர்றாங்க தெரியுமா?”

“கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைன்னா சும்மா இல்லைடா கண்ணா. அதுவும் அம்மாவும் நானும் ஒரே கம்பெனியில வேற வேலை செய்யறோமில்லையா அதான். அடடே இதோ உனக்கு பிடிச்ச பாதாம் கேசரி வந்தாச்சே?”

“ஹேப்பி பர்த்டே கண்ணா…” சுபாஷின் அம்மா கெளதமி மலர்ந்த புன்னகையுடன் கையில் ஒரு சின்ன தட்டில் சுடச்சுட பாதாம் கேசரி எடுத்துக்கொண்டு வந்தாள்.

“தேங்ஸ்மா…”

“கண்ணா, சாப்பிட்டு வந்து பாரு, உனக்காக எவ்வளவு பரிசு எல்லாம் வாங்கி வந்திருக்கோம் தெரியுமா?”

“இதோ வந்துட்டேன்பா…”

ஹாலுக்குள் வந்து பார்த்த சுபாஷின் கண்களே பூத்துவிடுமளவுக்கு ஹாலையே நிறைத்துக்கொண்டு விதம் விதமான வண்ண காகிதங்களில் சுற்றப்பட்ட பரிசுபொருட்கள் பளபளத்தன.

சிறிது நேரத்தில் அப்பா அம்மாவின் கூட வேலை செய்பவர்கள், நண்பர்கள், தினமும் இவனை அன்புடன் கவனித்துக்கொள்ளும் காமாட்சி ஆயா எல்லார் முன்னிலையிலும் கேக் வெட்டி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஊட்டிவிட்டு தனக்கு அவர்கள் இருவரும் ஊட்டியதை சாப்பிட்டுவிட்டு அதற்குப்பின் அரங்கேறிய விருந்துகளையும் கண்டு பூரித்திருந்த சுபாஷுக்கு இனம்புரியாத ஒரு சோகமும் கூடவே இருந்தது. அப்பா சந்திரசேகரனையே பார்த்துக்கொண்டிருந்தான். சந்திரசேகர் வந்திருந்த ஒவ்வொரு விருந்தாளிகளுடனும் சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வந்தவர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி பல்வேறு பரிசுப்பொருட்களையும் பூங்கொத்துக்களையும் சுபாஷின் கைகளில் திணிப்பதும் அதை அவன் அம்மா கெளதமி வாங்கி ஹாலில் ஏற்கனவே சேர்ந்துவிட்ட பரிசுப்பொருள் குன்றின் மேல் போடுவதுமாக இருந்தாள்.

ஒருவழியாக அனைவரும் கிளம்பிவிட, அப்பாவும் அம்மாவும் வேலைக்கு கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்க, காமாட்சி ஆயா வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். பரிசுப்பொருட்களை பிரித்துப் பார்க்கும் ஆசையே இல்லாத சுபாஷுக்கு அப்பாவிடம் கொஞ்ச நேரமாவது தனியாகப் பேச வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. படுக்கை அறைக்குள் நுழைந்து பார்க்க தீவிர மேக்கப்பில் மூழ்கியிருந்த அம்மா தெரிந்தாள். வெளியில் வந்து பார்க்க சோபாவில் அமர்ந்து கழுத்து டையைக் கட்டிக்கொண்டிருந்த அப்பா தெரிந்தார். அவரை நோக்கி ஓடிய சுபாஷ் பாய்ந்து அவரின் மடியில் அமர்ந்துகொண்டான்.

“அட கண்ணுக்குட்டி. என்னடா, உன்னோட பிரசன்ட்ஸையெல்லாம் பிரிச்சி பார்க்கலயா?”

“அத பாக்கறதுக்கு எனக்கு எவ்வளவோ நேரமிருக்குப்பா, உங்களோட பேசத்தான் எனக்கு நேரம் இல்ல.”

“என்? ஐயா அவ்வளவு பிஸியோ?”

“நானா நீங்களாப்பா?”

“குட்டி, நீ பேசறதுக்குதான் அப்பா நம்பர் கொடுத்திருக்கேன் இல்ல? எப்ப வேணும்னாலும் போன்ல கூப்பிடறதுதானே?”

“போன்ல பேசறதுக்கே பிடிக்கலப்பா. அப்படியே மீறி பேசினாலும் நான் கூப்பிடற நேரம்தான் ஏதாவது மீட்டிங்ல இருப்பீங்க. அப்படியே இல்லைன்னாலும் அவசரம் அவரசமா பேசுவீங்க. ஏம்பா? இன்னைக்கு என்னோட பிறந்தநாள்தானே? இன்னைக்கு ஒருநாளாவது என்கூட இருக்கக்கூடாதா?”

“அதான் 2 மணி நேரம் இருந்தேனே குட்டி. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தயாரிச்ச பிராஜக்ட்டோட ஆடிட்டிங் மீட்டிங் இன்னைக்கு. இன்னைக்கு உனக்கு ஸ்கூலுல லீவு வாங்கிக்கொடுத்திருக்கேன்ல, எங்க வேணும்னாலும் காமாட்சி ஆயாவைக் கூப்பிட்டுக்கிட்டு போயிட்டு வா. அதோட ஒரு நாள் நான் லீவு போட்டா மாத சம்பளத்துல 1500 ரூபீஸ் பிடிச்சுடுவாங்கடா. அப்பா இவ்வளவு கஷ்டப்படுறதே நிறைய பணம் சம்பாதிச்சு நாமெல்லாம் சந்தோஷமா இருக்கணும்னுதானே?”

“ஏம்பா? இன்னைக்கு எனக்கு என்ன பரிசு வாங்கினீங்க?”

“இன்னும் பார்க்கலயா? உனக்கு நிறைய பரிசு வாங்கியிருக்கோம். ஆனா, அதெல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி நீ ஆசையா கேட்ட காஸ்ட்லி புட்பால் வாங்கியிருக்கேன்.”

“எவ்வளவு செலவாச்சுப்பா?”

“அதெல்லாம் உனக்கு ஏன்டா கண்ணா? எங்களுக்கு நீ ஒரே பையன். உனக்குதானே நாங்க சம்பாதிக்கறதெல்லாம்?”

“இல்லப்பா, சும்மா சொல்லுங்க. தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு.”

“நானும் அம்மாவும் சேர்ந்து சுமார் 12000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கோம்.”

“அப்பா, எனக்கு அவ்வளவு பணம் செலவு செஞ்சு பரிசு வாங்கிக்கொடுக்கிறத விட நீங்க ஒரு நாள் என்கூட இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா?”

“அப்பாவுக்கும் ஆசைதாண்டா. ஆனா பணம் மட்டும் காரணமில்லடா. நான் ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்ச பிராஜக்ட் இன்னைக்கு ஆடிட்டிங்ல வருது அதான். மன்னிச்சிக்கோடா.”

“ஐ லவ் யூ அப்பா…” அப்பாவை இறுக்கக் கட்டிக்கொண்ட சுபாஷின் கண்களில் வழிந்த சிறு துளி நீரும் சந்திரசேகரின் சட்டையால் துடைக்கப்பட்டு மறைக்கப்பட்டது.

“மீ டூடா கண்ணா…” சுபாஷின் கன்னத்தில் ஒரு ஈர முத்தத்தை வைத்துவிட்டு சந்திரசேகர் புறப்பட்டுவிட கெளதமியும் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அவனுடன் சேர்ந்து சென்றுவிட்டாள்.

தனிமையில் விடப்பட்ட சுபாஷ் வருத்தத்துடன் காமாட்சி ஆயாவை நோக்கி ஓடினான்.

காலை பதினோரு மணிக்கு டி.வி பார்த்துக்கொண்டிருந்த சுபாஷ் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அழுது ஓய்ந்திருந்த கண்களில் வெளியில் நின்றிருந்தவரின் பிம்பம் மங்கலாக தெரிய யாரோ என்று நினைத்து காமாட்சி ஆயாவைக்கூப்பிடத் திரும்பியவன் மூளையில் சட்டென்று மின்னலடிக்க சடாரென்று திரும்பினான்.

“அப்பா… அப்பா…”

ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக பாய்ந்து ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்ட சுபாஷை அப்படியே வாரி எடுத்து முகம் முழுக்க ஈரமாக்கினான் சந்திரசேகர்.

“எப்படிப்பா? எப்படி வந்தீங்க?”

“நீ காலையிலேயே கேட்ட இல்லடா குட்டீ? அதான் மனசு கேக்கல லீவு போட்டுட்டு வந்துட்டேன். இனிமே எனக்கு நீதாண்டா முக்கியம். நாலைக்கே ஷிப்ட் டைமை மாத்த அப்ளிகேஷன் போட்டுட்டு நானும் அம்மாவும் காலையில உன்ன ஸ்கூலுல விட்டுட்டுத்தான் வேலைக்குப் போவோம். சாயந்திரம் சீக்கிரமே வந்து உன்னோட விளையாடுவேன்.”

“நிஜமாத்தான் சொல்றீங்களாப்பா? என்னால நம்பவே முடியலப்பா. நான் புட்பால் கேட்டதே உங்களோட விளையாடத்தாம்பா.”

“நிஜமாத்தாண்டா குட்டீ. இப்பவே புட்பால் விளையாடலாமா?”

முகம் முழுக்க சிரிப்புடன் எழுந்து தன்னுடைய விரல்பிடித்து நடக்கும் மகனை நினைத்து சந்தோஷத்தில் மிதந்த சந்திரசேகரனின் மனத்திரையில் அன்று காலையில் அலுவலகத்தில் நடந்தது மெளனமாக ஓடியது.

“என்ன சார் சொல்றீங்க? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பிராஜக்ட்டை செஞ்சேன் தெரியுமா?”

“புரியுது மிஸ்டர் சந்திரசேகர். ஆனா, கம்பெனி முடிவு செஞ்சுட்டா நான் என்ன செய்யிறது? உங்களுக்கே நம்ம கம்பெனியப் பத்தி தெரியும். ஆடிட்டிங்ல சரியா வரலன்னா பிராஜக்டை பெயிலியர்னுதான் முடிவு செய்வாங்க. அதனால உனக்கு இந்த மாதம் தர வேண்டிய புரமோஷனையும் இன்னும் கொஞ்ச மாசத்துக்கு தள்ளிப்போட்டிருக்காங்க.”

“சார். இந்த பிராஜக்ட்டுக்காக நான் என் பையனைக்கூட கவனிக்காம இரவு பகலா உழைச்சேனே. அதற்கு கம்பெனி குடுக்குற மரியாதை இதுதானா?”

“முதல்ல இந்தமாதிரி செல்றத நிறுத்துங்கப்பா. இன்னமும் எவ்வளவு நாளுக்குத்தான் சாப்ட்வேர் எஞ்ஜினீயருங்கல்லாம் இந்தமாதிரியே சொல்லிட்டிருப்பீங்க? நானும் சாப்ட்வேர் எஞ்ஜினீயரா இருந்துதான் இன்னைக்கு பிராஜக்ட் மேனேஜரா இருக்கேன். எனக்கு வீடு இல்லையா குடும்பம்தான் இல்லையா? குடும்பமும் வேலையும் இரண்டு துருவங்கள் போலத்தான். ஆனா அது ரெண்டுக்கும் நீங்க கொடுக்கிற ரேஷியோ சரியா இருக்கனும். அதவிட்டுட்டு குடும்பத்தை விட்டுட்டு வேலை செஞ்சேன்னு சொல்றவனும் வேலையை விட்டுட்டு குடுப்பத்த பார்த்தேன்னு சொல்றவனும் பைத்தியக்காரணுங்க. உனக்கு நேர நிர்வாகம் தெரியலேன்றதுதான் உண்மை.”

பிராஜக்ட் மேனேஜர் கூறிவிட்டுப் போய்விட, அவரின் கூற்றிலிருந்த உண்மை சந்திரசேகரினின் நெஞ்சை சுட்டது. ஆமாம், எனக்கு நேர நிர்வாகம் தெரியவில்லைதான். எது முக்கியமோ அதற்கு அதிக நேரம் ஒதுக்க மறந்துவிட்டேன். தற்காலிக சந்தோஷமான பணத்திற்கும் வேலைக்கும் பார்த்து நிரந்தர சந்தோஷமான குடும்பத்தையும் பாசத்தையும் மறந்துட்டேன். இன்னைக்கு கூட சுபாஷ் எவ்வளவு ஆசையா ஒரு நாள் என்கூட இருங்கப்பான்னு கேட்டான். இனிமே அலுவலகத்திற்கு கொடுக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு வீட்டிற்குத்தான் அதிக நேரம் கொடுக்க வேண்டும். அப்பத்தான் ரேஷியோ சரியா இருக்கும்.

அப்பாவும் மகனும் மதியான வெயிலையும் மதிக்காமல் அபார்ட்மென்ட் பார்க்கில் துள்ளிக்குதித்து கால்பந்து விளையாடுவதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் அபார்ட்மென்ட் வாட்ச்மேன்.