அன்று…
சோமேஸ்வரனுக்கு இந்த ஆண்களின் அநாதை விடுதி பயத்திற்கு பதில் ஆச்சரியத்தையே அதிகம் தந்தது. ஆண்களின் அநாதை விடுதி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் இந்த விடுதியின் மூலம் பயன்பெறுபவர்களில் பெரும்பாலானோருக்கு அம்மாவோ இல்லை அப்பாவோ அல்லது இரண்டு பேருமோ இருப்பது தெரிந்து ஆச்சரியமடைய விடுதியில் இவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சேர்ந்திருந்த இவனுடைய அண்ணன் சங்கரன் அந்த சந்தேகத்திற்கு விடையளித்திருந்தான்.
07.6.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
சூரியனின் காலைக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலூரின் திடீர்குப்பம் கிராமத்தைச் சூடேற்றிக்கொண்டிருக்க, கிராமத்தை ஒட்டி இருந்த பென்னையாற்றில் சூரியக் கதிர்கள் பட்டு எதிரொலித்தது பொன்னை அள்ளிக் கொட்டியது போல ஜொலிஜொலித்தது. ஆற்றுக்கு இந்தப் பக்க கரையில் வீடுகள் குட்டி குட்டியாக முளைத்திருக்க ஆற்றின் மறுக் கரையில் நீண்ட வயல்வெளியும் அதை ஒட்டிய கள்ளுக் கடையும் தெரிந்து. ஆற்றில் எப்போதுமே இடுப்பளவு தண்ணீர் என்பதால் தைரியமாக அந்த அதிகாலை வேலையிலும் ஆற்றைக் கடந்து கள்ளுக் கடைக்கு சென்றுகொண்டிருந்த ‘குடி’மகன்களின் [...]
07.6.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
கெட்ட காலைப் பொழுது என்று வணக்கம் சொன்ன அருள் பிரகாசத்தை தீரனும் ரோஸ்லினும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க முதலில் சுதாரித்துவிட்ட தீரன் வாயைத் திறந்தான்.
“என்ன சார் இது? எப்பவும் இப்படி நீங்க பேசி நான் பார்த்ததேயில்லையே?”
“மன்னிச்சிடுப்பா, நான் சொல்ல வந்த விஷயம் எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அது. ரோஸ்லினுக்கு நான் ஒரு கெட்ட செய்தியை சொல்லியாக வேண்டும்”
07.3.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
விடியற்காலையிலேயே பரபரப்பாகிவிடும் கோவையின் ஆர்.எஸ். புரத்தின் டி.வி. சாமி தெருவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்தச் சின்ன பங்களா அமைதியாகத் தெரிந்தது. கோவையின் ஆர்.எஸ். புரம் ஒரு வணிகர் வீதி என்பதால் அதிகாலையிலேயே முழித்துக்கொண்டு நாயர் கடைகளும் பால் வழங்கு நிலையங்களுமாக பரபரப்புடன் இருந்தது. ஆர்.எஸ். புரத்தில் வீற்றிருக்கும் பல பணக்கார முதலைகளின் இல்லங்களாக விரிந்துகிடக்கும் ஒவ்வொரு தெருக்களும் காலைநேர அலுப்பில் மூழ்கிக்கிடந்தது. டி.வி. சாமி வீதியிலிருந்த அந்த சிறிய பங்களா மட்டும் வித்தியாசமாக விடிகாலையிலேயே விழித்துக்கொண்டாலும் அதிக [...]
07.3.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
மதுரையின் அதிகாலைச் சூரியனின் இதமான சூட்டில் எழுந்த திருமங்கலம் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சோம்பலை முறித்துக்கொண்டு வழக்கமான சுறுசுறுப்பை கையிலெடுத்தது. அதிகாலையிலேயே பால் போடும் பையன்களும் பேப்பர் போடும் பையன்களும் தத்தமது வேலையை உத்தமமாக செய்துகொண்டிருக்க, அதிகாலை பூஜைக்கான ஆலய மணிகள் அடிக்கத்துவங்கிவிட்டது. ஹிந்துக் கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் கலந்து ‘மதத்தினால் வேறுபடினும் மனத்தினால் நாம் இந்தியரே’ என்ற இந்திய ஒற்றுமையை பறைசாற்றிக்கொண்டிருந்தது. வாசலில் தெளித்து கோலமிடும் பண்பாடு இன்னமும் எம்மை விட்டு [...]
07.3.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்