ஐ லவ் யூ அப்பா
பதிவை அச்செடு
இந்தப் பதிவு ஸ்ரீயின் சிறுகதைகள் தொடரின் 2 பதிவுகளில் 1-ம் பதிவுவழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவ அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை புத்திக்கு புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான்.
“ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டீ…”
“ஹை… அப்பா… இன்னைக்கும் சீக்கிரமே எழுந்திட்டீங்கன்னு நினைச்சேன்!” நம்ப முடியாமல் அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் சுபாஷ்.
“இன்னைக்கு உன்னோட பர்த்டே இல்லையாடா? [...]