பதிவர் பதிவுகள்

பாட்டி நீதிமன்றத்திற்கு போனால்?

பாட்டி நீதிமன்றத்திற்கு போனால்?

உண்மையில் நடந்த நீதிமன்ற விவகாரம்: அமெரிக்காவிலுள்ள மிஸிஸிப்பி மாநிலத்திலுள்ள தெற்குப்பகுதி சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:

கருத்துகள் இல்லை

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்பு நண்பர்களே, நண்பிகளே, உங்களனைவருக்கும் எனது இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – [...]

கருத்துகள் இல்லை

உண்மையில் நிகழ்ந்த வக்கீல் - சாட்சி விவாதங்கள்...

உண்மையில் நிகழ்ந்த வக்கீல் – சாட்சி விவாதங்கள்…

வக்கீல்: இந்த மருந்து உங்களின் நினைவை பாதித்ததா? சாட்சி: ஆமாம் வக்கீல்: எந்த வழிகளில் உங்கள் நினைவை பாதித்தது? சாட்சி: நான் மறந்துவிட்டேன் வக்கீல்: மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்த ஒன்றை எடுத்துக்காட்டாக கூறமுடியுமா? —- வக்கீல்: உங்களின் கணவர் அன்று காலையில் எழுந்தவுடன் முதலில் என்ன சொன்னார்? சாட்சி: “நான் எங்கே இருக்கிறேன் கேத்தி?” என்று கேட்டார் வக்கீல்: அது ஏன் உங்களை பாதித்தது? சாட்சி: என் பெயர் சூசன் —- வக்கீல்: கடைசிப்பையன், இருபத்தியோரு வயது [...]

கருத்துகள் இல்லை

தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேவை!

உங்களனைவருக்கும் நான் இன்னொரு அற்புதமான தமிழ் வலைத்தளம் விக்கிபீடியா முறையில் வைத்துள்ளது தெரியும் என்று நினைக்கின்றேன். தெரியாதவர்கள் தயவு செய்து தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தை சென்று காணுங்கள். இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் அற்புத மொழியான தமிழை இழக்க விரும்பாத என்னைப் போன்ற தமிழ் மொழிப்பிரியர்கள் அணைவரும் இந்த வலைத்தளத்தை உபயோகிக்கலாம். இது அணைவரும் மாற்றங்களை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் [...]

கருத்துகள் இல்லை

ஆப்பிள் சஃபாரி - தமிழுக்கு உகந்ததல்ல

ஆப்பிள் சஃபாரி – தமிழுக்கு உகந்ததல்ல

ஆப்பிள் சஃபாரி வலை உலாவி என்றால் எனக்கு உயிர். அது எழுத்துக்களைக் காட்டும் விதமே தனி. எத்தனை மணி நேரம் என்றாலும் அதில் படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், யூனிகோடு முறையை ஆதரிக்கும் சஃபாரி உண்மையில் தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அழகாக காட்டுகின்றது, ஆனால் தமிழின் வார்த்தை அமைப்புகள், வாக்கிய அமைப்புகளை அது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழில் எழுதிய நீண்ட வரிகள் துண்டித்து அடுத்த வரியில் வராமல் அந்த வரியிலேயே நீண்டு கொண்டு [...]

2 கருத்துகள்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

என் இனிய தோழர் தோழியரே, உங்களனைவருக்கும் எனது உள்ளங் கணிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தென்னாடுடைய ஈசன் உங்களனைவரையும் காப்பாற்றி அருளுவானாக! இந்த இனிய தமிழ் புத்தாண்டில் நான் சில யோசனைகளை செய்கின்றேன். தவறாயிருப்பின் தயவு செய்து மன்னித்து மறந்துவிடுங்கள்: நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் வருடங்கள் தெரியும்? நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்கள் தெரியும்? நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எண்கள் தெரியும்? இதற்கு பதில் கண்டிப்பாக நிறைய பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. [...]

கருத்துகள் இல்லை

கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?

அறிமுகம் தமிழை கணினியில் உபயோகப்படுத்துவதற்கு யூனிகோட் முறை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சில எழுத்துருக்களை (Fonts) வைத்துக்கூட தமிழில் எழுதலாம் ஆனால் அவை கோப்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். வலைத்தளங்களிலும் மென்பொருட்களிலும் நாம் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி தமிழில் எழுதுவது கடினம். ஏனெனில் வலைத்தளங்களாயிருப்பின் எழுத்துருவை இறக்குமதி செய்தால்தான் தமிழில் தெரியும். மென்பொருட்களாயிருப்பின் சில மென்பொருட்கள்தான் எழுத்துருக்களை மாற்ற அனுமதிக்கும். இதையெல்லாம் சரிசெய்யப் பிறந்ததே யூனிகோட் (யூனிகோடு என்றால் என்ன என்பதை அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்)

1 கருத்து

பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்

பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்

பாரதி ஒரு அற்புதமான கவிஞன். அவனுடைய கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு மகாகவி இந்த உலகத்தில் வாழும்போது அவனுக்கு ஒன்றுமே இந்த உலகம் கொடுக்கவில்லை. மிகவும் வறுமையில் வாட விட்டது. அது மட்டுமில்லாமல் ஓட ஓடவும் விரட்டியது. அவன் ஆசைப் பட்ட எதுவுமே அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் ஆசைப்பட்டது என்னவென்று இந்தக் கவிதையில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கின்றான். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் [...]

3 கருத்துகள்

பாரதியின் வழியில்…

சொல்லப் போனால் பாரதி போன்ற கவிஞரும் இல்லை அவனைப் போன்ற வேகமும், அறிவும், தெளிவும் அமைந்தவர்களும் இல்லை. அவன் ஒரு அதியம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பல கஷ்டங்களே அவனை மிகவும் அறிவுடையவனாக படைத்தது என்பேன். என்னுடைய வாழ்க்கையும் கொஞ்சம் அவனைப் போன்றதுதான். எனக்கும் வாழ்க்கை மிகவும் கொடிய முகங்களைக் காட்டியிருக்கின்றது. ஆனால் அதுதான் ஒரு வேளை இன்று நான் இருக்கும் நல்ல நிலைமைக்கும், கொண்டிருக்கும் கணினி அறிவுக்கும் காரணம் என்று நினைக்கின்றேன். வாழ்க்கை தன்னை மிகவும் [...]

கருத்துகள் இல்லை

திருவாசக வாழ்த்து!

இந்தக் கவிதைகள் பக்கத்தை எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானுக்கான போற்றியாக ஆரம்பிக்கின்றேன். (அட, என்னுடைய கவிதைகள் தான் இங்கே இருக்கும் என்று நினைத்தீர்களா? மற்ற எனக்குப் பிடித்தவர்களின் கவிதையும் இருக்கும். ஆனால் யாருடையது அது எனும் குறிப்பும் இருக்கும்). இங்கே திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள்! நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 4 இல் 31234

premium theme