தமிழ் கல்யாணம்.காம் புதிய வடிவம் எடுக்கின்றது…

October 26, 2009 செய்திகள், தமிழ் மொழி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு

தமிழ் கல்யாணம் - உலகத் தமிழரின் இணைய சுயம்வரம்...உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களுடைய எதிர்கால கணவன் அல்லது மனைவியை தேடிக் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளவும் மிகவும் உதவும் வகையில் நான் உருவாக்கியிருந்த தமிழ் கல்யாணம்.காம் தமிழர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதனுடைய கீழ்க்கண்ட வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்கள்தான்:

  • மிகவும் வேகமாக தனது எதிர்கால துணையைத் தேடலாம்
  • தளம் முழுவதையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
  • ஜாதக பொருத்தங்களை வலைத்தளத்திலேயே பார்க்கலாம் (ஜோசியர் அல்லது ஐயர் தேவையில்லை)
  • தேடிய துணைகளுடன் தன்னுடைய ஜாதகத்தை அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.
  • துணையுடன் உரையாட தமிழ் கல்யாணம்.காம் அரட்டை சேவை (வலைத்தளத்திலும் தனியாக நிறுவிக்கொள்ளும் மெஸெஞ்சர் முறையிலும் கிடைக்கும்).
  • திருமணம் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு தேவையான அனைத்து விவரங்களும் தளத்திலேயே கிடைக்கும்.
  • அழைப்பிதழ் அடிப்பதில் ஆரம்பித்து திருமணம் ஆகியபின் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு வைக்கும் பெயர் வரை அனைத்து விவரங்களும் தளத்திலேயே கிடைக்கும்.

இந்த வலைத்தளம் முதல் ASP மொழியில் எழுதப்பட்டு செயல்பட்டது. தளத்தின் அமைப்புகள் நன்றாக இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது என்பதால் வடிவமைப்பு இப்போதைய நவீன அமைப்பு போலில்லை. அது மட்டுமின்றி Web 2.0 வில் கிடைக்கும் பலவித புதிய பயனர் முகப்புகள் மற்றும் அம்சங்கள் கிடைத்தால் வலைத்தளம் இன்னமும் மெருகு கூடும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது வலைத்தளம் முழுவதும் நவீன முறைப்படி வடிவமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்னோடியாக PHP மொழியில் மிகச் சிறந்த Yii Framework மூலம் தளம் எழுதப்பட்டு வருகின்றது. வரப்போகின்ற தளத்தின் முன்மாதிரியை தற்போது அமைத்துள்ளேன். நண்பர்கள் அதை இங்கே காணலாம்.

தளத்தைப் பார்த்துவிட்டு தங்களுடைய மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். இன்னும் வேறேதேனும் சிறப்பம்சங்கள் வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம். அனைத்து கருத்துக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறிச்சொற்கள்: , , ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme