ஆஸ்கார் விருதை வென்ற முதல் தமிழர், ஏ. ஆர். ரஹ்மான்

February 23, 2009 இந்தியா, செய்திகள், திரைப்படம், வாழ்த்துக்கள்

ஏ. ஆர். ரஹ்மான்தமிழ்நாட்டின் இசைப் புயல் இன்று வெளிநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளர் (இளையராஜாவிற்கு அடுத்த) ஏ. ஆர். ரஹ்மான் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மூல பாடல் (Original Song) மற்றும் மூல பாடல் இசை (Original Score) ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை குடிசையிலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற படத்திற்காக வழங்கியிருக்கின்றார்கள். இந்தப் படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை இதுவரை வென்றிருக்கின்றது. இந்தப் படம் வென்ற அனைத்து விருதுகளையும் இங்கே காணுங்கள்.

ஓடும் படத்திற்கான பாடல் இசை அமைப்பில் சிறந்து விளங்கும் மூல பாடல் (BEST ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES, ORIGINAL SONG) வென்றவர்கள் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் சம்பூரன் சிங் குல்சார்

ஓடும் படத்திற்கான பாடல் இசை அமைப்பில் சிறந்து விளங்கும் மூல பாடல் இசை (BEST ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES, ORIGINAL SCORE) வென்றவர் ஏ. ஆர். ரஹ்மான்

மற்ற ஆஸ்கார் விருதுகளை இங்கே காணலாம்.

இந்த பெருமைக்குரிய தருணத்தில், ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர் திருமதி பானு அதையா அவர்களையும் பெருமையுடன் நினைவு கூறுகின்றேன். அவர்கள் காந்தி படத்திற்கான சிறந்த உடையமைப்பு ஆஸ்கார் விருதை திரு ஜான் மோல்லோ என்பவருடன் இணைந்து 1982 வருடம் வென்றார்கள்.

குறிச்சொற்கள்: , , , , , ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme