தமிழன்.in – உலகத் தமிழர்களின் உலகம்…
December 27, 2008 செய்திகள், பொதுவானவை
அன்பு நண்பர்களே,
என்னுடைய தமிழமுதம் முயற்சிக்குப் பிறகு உலகத் தமிழர்களை இணைக்கவென்று ஒரு சமுதாய வலைக்கூடம் (Social Networking) அமைக்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். இன்று அந்த முயற்சிக்கு உருவகம் கொடுத்துள்ளேன் என்பதை உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.
வெறும் சமுதாய வலைக்கூடமாக மட்டும் இல்லாமல் உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட வலைப்பூக்களை அவர்களுடைய விருப்பப் பெயருடன் அமைந்த துணை டொமைனை (Sub Domains) வைத்து உருவாக்கும்படி அமைத்துள்ளேன். இதன் மூலம் இனி உங்களுக்கு ஒரு வலைப்பூ வேண்டுமெனில் எந்த விதமான செலவும் செய்யாமல் இலவசமாக உங்களின் பெயர் கொண்ட துணை டொமைனில் உருவாக்கிக்கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது மட்டுமின்றி உங்களின் நண்பர்களுடன் உறவாட மற்றும் கலந்துரையாட என்று பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இன்றே இணைந்துவிடுங்கள்: தமிழன்.in
இது தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் தொடர்புகொள்ள: help@tamizhan.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
கருத்துக்கள் (2)
தமிழின் முதல் buddypress தளத்துக்கு வாழ்த்துகள்
நன்றி ரவிஷங்கர்…
இது என்னுடைய சிறு முயற்சிதான். நிறைய செய்ய யோசனைகள் இருக்கின்றது.