ஆப்பிள் சஃபாரி – தமிழுக்கு உகந்ததல்ல

January 10, 2008 இணைய உலாவிகள், உதவிக் குறிப்புகள்

ஆப்பிள் சஃபாரி வலை உலாவி என்றால் எனக்கு உயிர். அது எழுத்துக்களைக் காட்டும் விதமே தனி. எத்தனை மணி நேரம் என்றாலும் அதில் படித்துக்கொண்டே இருக்கலாம்.

ஆனால், யூனிகோடு முறையை ஆதரிக்கும் சஃபாரி உண்மையில் தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அழகாக காட்டுகின்றது, ஆனால் தமிழின் வார்த்தை அமைப்புகள், வாக்கிய அமைப்புகளை அது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழில் எழுதிய நீண்ட வரிகள் துண்டித்து அடுத்த வரியில் வராமல் அந்த வரியிலேயே நீண்டு கொண்டு போகின்றன. இவ்வளவு புகழ் பெற்ற ஒரு உலாவியில் இப்படி ஒரு கஷ்டமா என்று எனக்கு வியப்புதான் வந்தது. இணையத்தில் எவ்வளவு தேடியும் இதற்கு ஒரு தீர்வு எனக்கு கிடைக்க வில்லை. உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் தயவு செய்து எனக்கு சொல்லவும்.

உங்களுக்கு என் பிரச்சினையை விளக்க கீழே மூன்று திரை தோற்றங்களை கொடுத்துள்ளேன்:

Safari Tamil 1Safari Tamil 2சஃபாரி உலாவியின் முழுத் தோற்ற மாதிரி

தற்போதைய நிகழ்வு [ஏப்ரல் 8, 2008]:

புதிதாக வெளியிடப்பட்ட ஆப்பிள் சஃபாரி 3.1 பகுப்பில் இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவை அவர்கள் கண்ணுற்றார்களோ என்னவோ? இருப்பினும் என்னுடைய பிரச்சினையை சுலபமாக தீர்த்து வைத்த ஆப்பிள் நிறுவணத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த புதிய வெளியீட்டின் சிறப்புகளை விரைவில் இந்த வலைப்பதிவுகளில் விவரமாக விளக்குகின்றேன். இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டதை உறுதிகூறும் திரைத்தோற்றம் கீழே…

ஆப்பிள் சஃபாரி 3.1 திரைத்தோற்றம்

குறிச்சொற்கள்: , , ,

«
»

கருத்துக்கள் (2)

 

  1. ரமேஷ் says:

    இந்தப் பிரச்சினை எனக்கு இல்லை. உங்கள் சஃபாரி விண்டோ சிறியதாக இருப்பதால் இது போல் தோற்றம் ஏற்படலாம்.

    இந்த சுட்டியிலிருக்கும் சஃபாரி-ஸ்ட்ரெச் முயஸ்சித்துப் பாருங்கள்.

    http://www.apple.com/downloads/macosx/internet_utilities/safaristretch.html

  2. நண்பர் ரமேஷ்,

    கண்டிப்பாக இது என்னுடைய பிரச்சினை இல்லை. என்னுடைய திரைத்தோற்றத்தின் விரிவு மிகவும் பெரியது (1680×1050) 22″ TFT Monitor.

    சஃபாரி-ஸ்ட்ரெச் வெறுமனே விண்டோவை மட்டும் விரிவுபடுத்த முயலும். உங்களுக்காக ஒரு என்னுடைய முழு திரைத்தோற்றத்தை படம் பிடித்து சேர்த்துள்ளேன் (வலைக்குறிப்பின் பகுதியில் பார்க்கவும்).

    ஆகவே, சஃபாரியால் தமிழ் எழுத்துக்களை பத்திகளாக காட்ட இயலவில்லை என்பது சரியே. நீங்கள் மேக் இயங்குதளத்தில் இருக்கின்றீர்களா? நான் விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இருக்கின்றேன். சஃபாரி 3.0.4 பகுதியை உபயோகப்படுத்துகின்றேன்.

    என்னுடைய பிரச்சினைக்கு வழி கூற முயன்ற தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!!!

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme