பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்
பாரதி ஒரு அற்புதமான கவிஞன். அவனுடைய கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு மகாகவி இந்த உலகத்தில் வாழும்போது அவனுக்கு ஒன்றுமே இந்த உலகம் கொடுக்கவில்லை. மிகவும் வறுமையில் வாட விட்டது. அது மட்டுமில்லாமல் ஓட ஓடவும் விரட்டியது. அவன் ஆசைப் பட்ட எதுவுமே அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் ஆசைப்பட்டது என்னவென்று இந்தக் கவிதையில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கின்றான்.
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
கருத்துக்கள் (3)
I LIKE TOO BARATHI POIAM
i love bharathi
சங்கர் மற்றும் மணி கண்ணன், உங்களின் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி…