அன்பு நண்பர்களே…
புவிவெப்பத்தைக் குறைப்பதில் தனது பங்கு என்ன என்பதை அமெரிக்கா அறிவித்துவிட்டது. அதாவது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 18 சதவீதம் குறைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது. வளரும் நாடுகளில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சீனா, தான் 35 முதல் 40 விழுக்காடு குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவும் ஓரளவு இதே அளவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இந்தியா [...]
12.4.09 | இந்தியா, குறிப்புகள், பொதுவானவை, வாழ்வியல் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களுடைய எதிர்கால கணவன் அல்லது மனைவியை தேடிக் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளவும் மிகவும் உதவும் வகையில் நான் உருவாக்கியிருந்த தமிழ் கல்யாணம்.காம் தமிழர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதனுடைய கீழ்க்கண்ட வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்கள்தான்:
மிகவும் வேகமாக தனது எதிர்கால துணையைத் தேடலாம்
தளம் முழுவதையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
ஜாதக பொருத்தங்களை வலைத்தளத்திலேயே பார்க்கலாம் (ஜோசியர் அல்லது ஐயர் தேவையில்லை)
தேடிய துணைகளுடன் [...]
10.26.09 | செய்திகள், தமிழ் மொழி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே நான் நானாக இல்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்புதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) படத்தைப் பார்த்ததில் ஏற்கனவே பிச்சைக்காரர்களின் கடின வாழ்க்கையைப் பார்த்து மனம் நொந்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. என் பார்வையில் இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பிச்சைக்காரர்களின் நிதர்சன வாழ்வை இப்படி யாரும் படம் பிடித்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தின் இயக்குநர் பாலாவிற்கு என்னுடைய [...]
03.3.09 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
இந்தப் படம் இந்தியர்களை முதலில் திரும்பிப் பார்க்க வைத்து இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. உலக சினிமா நட்சத்திரங்களின் கனவு விருதான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ஆகாடமி விருதுகளில் 2008 வருஷத்திற்கான 8 விருதுகளை வென்றதுதான் இன்று உலகமே திரும்பி பார்ப்பதற்கு காரணம். விருது வாங்கிய படம் என்றாலே சிலவற்றை தவிர்த்து பொதுவாக விமர்சனங்கள் நேர்மையாக வருவதில்லை. அந்தச் சிலவற்றுள் அடங்குப்படியான ஒரு திறந்த விமர்சனம் இது.
விமர்சனத்திற்கு போவதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றிய சில [...]
02.25.09 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
தமிழ்நாட்டின் இசைப் புயல் இன்று வெளிநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளர் (இளையராஜாவிற்கு அடுத்த) ஏ. ஆர். ரஹ்மான் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மூல பாடல் (Original Song) மற்றும் மூல பாடல் இசை (Original Score) ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை குடிசையிலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற படத்திற்காக வழங்கியிருக்கின்றார்கள். இந்தப் படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை இதுவரை வென்றிருக்கின்றது. இந்தப் படம் [...]
02.23.09 | இந்தியா, செய்திகள், திரைப்படம், வாழ்த்துக்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
திட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்துவேல் டென்ஷனாகிவிட்டாலே புகையை ஊதுபவர். ஆனால் இன்று வேர்த்துவழிந்தும் கூட மறுபடியும் புகைப்பிடிக்கவே அவருக்குத் தோன்றவில்லை. யாரிந்த ருத்ரன்? இரகசிய போலீசா? சி.பி.ஐ அல்லது ‘ரா’ அமைப்பை சார்ந்தவரா? அப்படியெல்லாம் தெரியவில்லையே. கண்டிப்பாக அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஒரு தனிநபர் இந்த அலுவகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதும் அவர் கூறுவதை இந்த நிறுவன அதிபர்கள் கேட்க வேண்டும் என்ற அவசியமும் சாத்தியமில்லாதது.
12.29.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
அன்பு நண்பர்களே,
என்னுடைய தமிழமுதம் முயற்சிக்குப் பிறகு உலகத் தமிழர்களை இணைக்கவென்று ஒரு சமுதாய வலைக்கூடம் (Social Networking) அமைக்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். இன்று அந்த முயற்சிக்கு உருவகம் கொடுத்துள்ளேன் என்பதை உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.
வெறும் சமுதாய வலைக்கூடமாக மட்டும் இல்லாமல் உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட வலைப்பூக்களை அவர்களுடைய விருப்பப் பெயருடன் அமைந்த துணை டொமைனை (Sub Domains) வைத்து உருவாக்கும்படி அமைத்துள்ளேன். இதன் மூலம் இனி உங்களுக்கு ஒரு வலைப்பூ வேண்டுமெனில் எந்த விதமான செலவும் செய்யாமல் இலவசமாக [...]
12.27.08 | செய்திகள், பொதுவானவை | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்